இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

‘ஊருக்கு உபதேசம்’படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆனந்த், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1986இல் வெளியான ‘நான் அடிமை இல்லை’ படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் அவரது இசையில் இடம்பெற்ற ‘ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வெற்றி மேல் வெற்றி, காவலன் அவன் கோவலன், ராசாத்தி வரும் நாள், கயிறு, நாணயம் இல்லாத நாணயம், உள்பட 10 தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் கன்னட மொழியில் 180க்கும் மேற்பட்ட படங்களுக்கு […]

என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார்- கவிஞர் வைரமுத்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல் செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர். உள்ளொன்று வைத்துப் புறவைத்துப்புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம். எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார் திரையில் நல்லவர் ; அரசியலில் வல்லவர் சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர் கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் […]

நடிகர் விஜயகாந்த் காலமானார்

பிரபல நடிகரும், தேமுதிகவின் நிறுவுனருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் […]

லியோ படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி !

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது. […]

“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் நசீர்!

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியமும் கலைஸ்ரீயின் கலைஸ்ரீ மன்றமும் இணைந்து தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் ஊடக அனுசரணையுடன் 29.09.2023 கொழும்பு பழைய நகர சபை மண்டபத்தில் நடத்திய பாடு நிலா பாலாவின் பாமாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்நு கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் தலைவர். எஸ்.விஜயராஜா கூறுகிறார். நிகழ்வு குறித்து  மேலும் கருத்து தெரிவித்த அவர். பாடு நிலா பாலாவின் […]

மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம் ! மத்திய அமைச்சு விசாரணை!

  விஷால் – எஸ். ஜே சூர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி . இந்தப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்காக தாம் மத்திய திரைப்பட தணிக்கை குழுவிற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக நடிகர் விஷால் வெளிப்படையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். அதில் தமது சினிமா வாழ்க்கையில் இவ்வாறான நிலை தமக்கு ஏற்பட்டது இல்லை என குறிப்பிட்டுள்ளார். #Corruption being shown on silver screen is fine. But not in real life. […]

ஜவான் திரைப்படத்தை வாட்சப் , டெலிகிராம் ஊடாக வெளியிட்டதால் நடவடிக்கை!

ஜவான் திரைப்படத்தை தயாரித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜவான் திரைப்படத்தின் திருட்டுப் பிரதியை வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் டெலிகிராம் சேனல்கள் ஆகியவற்றில் சட்ட விரோதமாக பகிர்வதை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்றும், அதனை செயலிழக்க செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தது. வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களான ஏர்டெல், ஐடியா- வோடாஃபோன், ரிலையன்ஸ் -ஜியோ மற்றும் பி எஸ் […]

” என் உயிர் தோழன்” பாபு மரணம்! இயக்குனர் பாரதிராஜா அஞ்சலி!

என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 1990-ம் ஆண்டு வெளியான ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. இந்தப்படத்தின் மூலம் ‘என் உயிர் தோழன்’ பாபு என பரவலாக அறியப்பட்டவர். கிராமத்துக்கதைகளுக்கு ஏற்ற நாயகன் என்ற புகழப்பட்ட இவர், 1991-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பெரும்புள்ளி’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு பூமாலை தான்’ பாடல் அப்போது எங்கெங்கும் ஒலித்தது. ‘பொண்ணுக்கு சேதி […]

தனது தந்தையை போல மகளும் தற்கொலை! நடிகர் விஜய் ஆண்டனி வாழ்வில் சொல்ல முடியாத சோகம்!

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ஆண்டனியின் 16 வயதுடைய மகள் மீரா. இவர் சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் மின்விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மன அழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வீட்டில் தடயவியல் நிபுணர்கள் […]

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் விருது விழா!

மொஹமட் நாசர் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஐந்தாம் ஆண்டு  ” கலாரத்ன விபூஷன்” விருது விழா வத்தளை நகரசபை மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த விழா 17 ஆம் திகதி  ஞாயிறன்று கோலாகலமாக நடைப்பெற்றது. இம்முறை 120 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில்  கலைஞர்கள் சமூக சேவையாளர்கள் மற்றும் ஏனைய துறையை சார்ந்தோர் அடங்குவதாக ஒன்றியத்தின் தலைவரான விஜயராஜா கூறினார்.