நடிகை அபர்ணா மரணம்! தற்கொலையா ? கொலையா?

மலலயாளத்தில் முன்னணி டிவி நடிகைகளில் ஒருவரான அபர்ணா நாயர் நேற்று வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரபல மலையாள நடிகை மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முன்னணி டிவி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபர்ணா நாயர். திருவனந்தபுரத்தின் கரம்னா பகுதியில் உள்ள வீட்டில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அபர்ணா பி நாயர் வசித்து வந்தார். கடந்த 2005-ம் […]

ரஜினிக்கு BMW – X7 காரை பரிசாக கொடுத்த சன் பிச்சர்ஸ்! “ஜெயிலர்” பட இலாபத்தால் வந்த யோகம்!

ஜெயிலர்’ படத்தின் வசூல் 600 கோடியை நெருங்குவதாக கூறப்படும் நிலையில்.. ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள BMW X7 காரை நடிகர் ரஜினிகாந்துக்கு பரிசாக வழங்கியது படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வசூலில் சாதனைகளை ஏற்படுத்தி வருகிறது ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் சுமார் 600 கோடி ரூபாயை வசூலித்து இதனை கொண்டாடும் முகமாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான கலாநிதி மாறன் ரஜினி அவர்களை சந்தித்து BMW […]

நான் கஷ்டத்தை கேட்டு படம் நடிப்பவன்! ” லக்கிமேன்’ யோகி பாபு

தான் கதை கேட்டு படம் பண்ணுவது கிடையாது,  என  நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.  திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்து இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள லக்கிமேன் திரைப்படம் வரும் செப்.1-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் யோகி பாபு,  வீரா, அப்துல், நடிகைகள் ரெய்ச்சல் ரெபீகா, சுஹாசினி குமரன்,  இசையமைப்பாளர் சான் ரோல்டன் […]

” பேச்சு” விருதுகளை அள்ளிய வீச்சு

  தென்னிந்தியாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Ondraga Entertainment, நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல சுயாதீன பாடல்கள் மற்றும் குறும்படங்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களின் சமீபத்திய வெளியீடுகளான முத்த பிச்சை (இந்தப் பாடலை இசையமைத்து, பாடி, இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்), எரிமலையின் மகளே (கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையில் பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்), Tour De Kollywood & Offscreen […]

” நடிகர் விஜய்” மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை தயாரிக்கும் லைக்கா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை படித்தவர். ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கியுள்ளார். தனது தந்தையுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஆடி உள்ளார். தாத்தா, அப்பாவை போல் இவருக்கும் சினிமா மீது ஆர்வம் அதிகம். இந்த நிலையில் அப்பா விஜய்யை போல் கதாநாயகனாக களமிறங்காமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குனராக ஜேசன் சஞ்சய் களமிறங்குகிறார். We are beyond excited 🤩 & […]

வசூலில் ₹600 கோடியை அள்ளிய ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ” ஜெயிலர்’ திரைப்படம் வசூல் ரீதியாக ₹600 கோடி இந்திய ரூபாய்களை வசூலித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியான ஜெயிலர் திரைப்படம் இன்றைய தினம் 600 கோடி எல்லையை நெருங்கி இருக்கிறது என பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை தெரிவிக்கும் மூத்த சினிமா விமர்சகரான மனோபாலா  விஜய் கூறுகிறார். ஜெயிலர் திரைப்படம் தமிழ் நாட்டில் ₹ 200 கோடி ஆந்திரர/ தெலுங்கான  ₹75  கோடி கேரளா  ₹  50 கோடி […]

” கடைசி விவசாயிக்கு”தேசிய விருது! அதில் நடித்த நல்லாண்டி ஐயாவிற்கு சிறப்பு விருது

சிறந்த தமிழ்ப்படமாக, ‘கடைசி விவசாயி’ தேர்வு திரைப்படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. 69-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது, மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்துக்கு அறிவிக்கப்பட்டதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இருக்கிறார். மேலும் சிறந்த மலையாளம் திரைப்படம் – Home சிறந்த கன்னடம் திரைப்படம் – 777 Charlie, சிறந்த தெலுங்கு திரைப்படம் – Uppena  தெரிவானது. அத்துடன் சிறந்த நடிகருக்கான தேசிய […]

சென்னை திரும்பிய அஜித் : “விடாமுயற்சி” படப்பிடிப்பு அக்டோபர் முதல்

ஐரோப்பிய நாடுகளில் தனது பைக் டூர் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் அஜித. தற்போது இலங்கை விஜயம் செய்திருக்கும் லைக்கா குழும நிறுவனர் அ.சுபாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ” விடாமுயற்சி ” படத்தில்  அஜித்குமார் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்பட வேளைகள் மே மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கதையில் ஏற்பட்ட மாற்றங்கள், லைக்கா நிறுவன மீதான அமுலாக்க பிரிவு சோதனை இதனால் படத்தின் ஆரம்ப பணிகள் தாமதமானது. இதனால் […]

அருவி மதன் இயக்கத்தில்” நூடுல்ஸ்’ செப் 8 உலகம் முழுவதும்

ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்பபடம். ‘ நூடூல்ஸ்” இதனை அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். செப் 8 ஆம் வெளியாகும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியிடுகிது. இது குறித்து விஹஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி கூறியிருப்பதாவது. நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கவனம் செலுத்தலாமே? எனக் கேள்வி கேட்டதுண்டு. சிலருக்கு சினிமா மோகம். சிலருக்கு […]

வசூல் சாதனையாளன் “ஜெயிலரை” தடை செய்ய கோரி உயர்நீதி மன்றில் மனுதாக்கல்!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கிற ஜெயிலர் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அதுபற்றிய பரபரப்பான விபரம் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் […]