ஜவான் திரைப்படத்தை வாட்சப் , டெலிகிராம் ஊடாக வெளியிட்டதால் நடவடிக்கை!

ஜவான் திரைப்படத்தை தயாரித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜவான் திரைப்படத்தின் திருட்டுப் பிரதியை வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் டெலிகிராம் சேனல்கள் ஆகியவற்றில் சட்ட விரோதமாக பகிர்வதை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்றும், அதனை செயலிழக்க செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தது. வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களான ஏர்டெல், ஐடியா- வோடாஃபோன், ரிலையன்ஸ் -ஜியோ மற்றும் பி எஸ் […]

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்தியா வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளை தொடங்குகின்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது. 3 வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி மறுத்ததற்காக சீனாவிற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையால் ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய […]

ஒலுவில் அல்-ஹம்றா மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

  (எஸ்.அஷ்ரப்கான்) மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை நிலைநாட்டியுள்ளார். கந்தளாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாடசாலைகளுக்கிடையிலான ‘மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி – 2023 ‘ இல் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவனான எம்.ஏ.ஆர்.ஹாபீஸ் ரய்ஹான் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைப் வென்றுள்ளார். இம்மாணவன் 60 மீற்றர், 100 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சிகளில் முறையே 02, 03ஆம் இடங்களையும் பெற்றுள்ளார். […]

தேசிய  ரீதியில்  சாதனை படைத்த மடு கல்வி வலய மாணவி லக்சாயினி.!

(வாஸ் கூஞ்ஞ) 20.09.2023கொழும்பில் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்று வரும் தேசியமட்ட விளையாட்டு நிகழ்வில் தேசிய ரீதியில் ரைகொண்டோ போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் மடு கல்வி வலய மாணவி லக்சாயினி. மன்னார் பெரியபண்டிவிரிச்சான்  மகா வித்தியாலயத்தின் மாணலியே ரைகொண்டோ போட்டியில் முதன் முதலாக பங்குபற்றி  குறித்த சாதனையை மாணவி லக்சாயினி. படைத்துள்ளார் மன்ஃபெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பாடசாலையின் விளையாட்டு வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தேசியமட்டத்தில் 2-ம் இடத்தினைப் பெற்று வெள்ளி பதக்கத்தினை தனதாக்கி […]

” என் உயிர் தோழன்” பாபு மரணம்! இயக்குனர் பாரதிராஜா அஞ்சலி!

என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 1990-ம் ஆண்டு வெளியான ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. இந்தப்படத்தின் மூலம் ‘என் உயிர் தோழன்’ பாபு என பரவலாக அறியப்பட்டவர். கிராமத்துக்கதைகளுக்கு ஏற்ற நாயகன் என்ற புகழப்பட்ட இவர், 1991-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பெரும்புள்ளி’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு பூமாலை தான்’ பாடல் அப்போது எங்கெங்கும் ஒலித்தது. ‘பொண்ணுக்கு சேதி […]

தனது தந்தையை போல மகளும் தற்கொலை! நடிகர் விஜய் ஆண்டனி வாழ்வில் சொல்ல முடியாத சோகம்!

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ஆண்டனியின் 16 வயதுடைய மகள் மீரா. இவர் சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் மின்விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மன அழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வீட்டில் தடயவியல் நிபுணர்கள் […]

பாடசாலையில் விளையாட்டு துறை அபிவிருத்திக்கு நிதி உதவி !

  பலாங்கொடை கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியின் கிரிக்கெட் அணி இம்முறை பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற பாடசாலையின் கிரிக்கெட் அணி, அநுராதபுரத்தில் நடைபெறும் அகில இலங்கை போட்டி தொடருக்கு செல்வது தொடர்பாக கல்லூரியின் அதிபர் அவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைய, அவர் இவ்விடயம் குறித்து கெயார் லங்கா அறக்கட்டளையின் பணிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதனை தொடர்ந்து, 91,400.00ரூபாய் நிதி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிதி […]

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் விருது விழா!

மொஹமட் நாசர் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஐந்தாம் ஆண்டு  ” கலாரத்ன விபூஷன்” விருது விழா வத்தளை நகரசபை மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த விழா 17 ஆம் திகதி  ஞாயிறன்று கோலாகலமாக நடைப்பெற்றது. இம்முறை 120 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில்  கலைஞர்கள் சமூக சேவையாளர்கள் மற்றும் ஏனைய துறையை சார்ந்தோர் அடங்குவதாக ஒன்றியத்தின் தலைவரான விஜயராஜா கூறினார்.

பலம்பொருந்திய மட்டு.அணிகளை வீழ்த்தி முன்னேறிய ஓட்டமாவடி வளர்பிறை

  மட்டக்களப்பு யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கணேஷமூர்த்தி ஞாபகார்த்த அணிக்கு ஏழு பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மாவட்டத்திலுள்ள மிகப்பலம் வாய்ந்த 48 அணிகள் கலந்து கொண்டன. இச்சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை அணியினர் மாவட்டத்தின் சிறந்த அணிகளான ரெட்ணம்ஸ், யங் ஸ்டார், இராமகிருஷ்ணா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதியாட்டத்திற்குத் தெரிவாகியிருந்தனர். அரையிறுதிப்போட்டியில் மட்டக்கப்பு மாவட்டத்தின் மிகப்பலம் பொருந்திய டிஸ்கோ அணியினை எதிர்கொண்டு 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியினைத் தழுவியிருந்த நிலையில், தொடரின் […]

பௌத்த ஆய்வு நிலையத்துக்கு பிரபுதேவா விஜயம்!

  இலங்கை வந்துள்ள பிரபல இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா, களனியில் அமைந்துள்ள பௌத்த ஆய்வு நிலையமொன்றுக்கு விஜயம் செய்துள்ளார். இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் பிரபுதேவா அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காகவே இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரபுதேவா இன்றைய தினம் (18) களனியில் அமைந்துள்ள பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்திற்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பிரபுதேவா அந்த நிறுவனத்தை ஆய்வு செய்த பிறகு பெருநிறுவன […]