வரைவு போட்டி அட்டவணை,இந்தியா- பாகிஸ்தான் போட்டி?

இந்தியாவில் ஓக்டோபர் 5 ம் திகதி 50 ஓவர் உலகக் குpண்ண கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 19திகதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் வரைவு போட்டி அட்டவணையை பிசிசிஐ ஐசிசி-க்கு அனுப்பியுள்ளது. அந்த வரைவு போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் […]

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் யார்?

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரா என்பதை தீர்மானிப்பது எனது வேலையல்ல என சூப்பர் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு அவர் கூறினார். இது அவரது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர். ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும், செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், மார்கரெட் கோர்ட்ஸ் உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.  

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அடுத்த சாம்பியன்ஷிப்புக்காக போராட போகிறோம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக கடந்த நான்காண்டுகளில் கடினமாகவே உழைத்திருக்கிறோம். நிறைய போராடியிருக்கிறோம் என்று தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் அவுஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது. இந்தியா 2 வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய […]

ஜோகோவிச் புதிய சாதனை

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். 3வது முறையாக பிரெஞ்சு […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அவுஸ்திரேலியாவுக்கு

உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) மகுடத்தை அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை தோற்கடித்து வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சுக்கு 469 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இந்திய அணியால் 296 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பளித்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய […]

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை நடத்துவது குறித்து முடிவு

2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இணைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைத்த முன்மொழிவுக்கு ஆசிய கிரிக்கெட் சபை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 13 போட்டிகளில் 04 அல்லது 05 போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் இலங்கையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், போட்டி தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் சில தினங்களில் ஆசிய கிரிக்கட் சபை […]

எந்த நேரத்திலும் மாறத் தயார் – தசுன்

எந்த நேரத்திலும் தனது நிலையை மாற்றிக்கொண்டு விளையாட தயாராக இருப்பதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக சிம்பாப்வே செல்வதற்கு முன்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெற்றி நமதாகட்டும்…

உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிம்பாபே நோக்கி சென்றுள்ளது. அங்கு இலங்கை அணி முதலில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு அணிகளுடன் பயிற்சிக்கு முந்தைய இரண்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகளுடன் இணைந்து சிம்பாபே புலவாயோ மற்றும் ஹராரே கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் தகுதிச் சுற்று […]

இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஒப்புதல் அளித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. தசுன் ஷனக தலைமையிலான அணியில் திமுத் கருணாரத்ன, மத்திஷ பத்திரன ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க, சரித் ஹசலங்க, தனஞ்சய டி சில்வா, சதிர சமரவிக்ரம, வனிது ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமிர, கசுன் ராஜித, லஹிரு குமார, மஹிஷ் தீக்ஷன, […]

ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் இலங்கை வீரா்கள்…

தென்கொாியாவில் இடம்பெற்ற 20 வயதிற்கு உட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கை குழாம் நேற்று(8) இரவு நாடு திரும்பியது. ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் இலங்கை, 4 தங்க பதக்கங்களையும், 2 வௌ்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது. இந்த போட்டிகளில் பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 400 மீட்டா் ஓட்டப்போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும் தருஷி குருணாரத்ன வென்றாா். இதேவேளை, 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை […]