IPL களத்தை அதிர வைத்த ஜெய்ஸ்வால்

IPL வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை RR  அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார். 13 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த அவர், 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்தார். யஷஸ்வியின் சிறப்பான இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். முன்னதாக, கே.எல்.ராகுல் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் 14 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அதிவேக அரை சதம் என்ற கூட்டு சாதனையை படைத்தனர். நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் […]

நியூசிலாந்து கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி விலக முடிவு

நியூசிலாந்து கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் வயிட் பதவி விலக முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபையிடம் தெரிவித்துள்ளார். டேவிட் வயிட், முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் ஒக்லாந்து மற்றும் வெலிங்டனில் ரக்பியின் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.

மத்திஷ பத்திரன முன்னோக்கி…

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்  போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் மதிஷ பத்திரன 11வது இடத்திற்கு முன்னேற முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மதீஷ். நேற்று (10) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல மத்திஷ பத்திரன அபாரமான பங்களிப்பை வழங்கினார். இதேவேளை, IPL போட்டியின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் […]

ICC துணைத் தலைவர் இலங்கை வந்தடைந்தார்

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீடுகள் குறித்து விசாரணை நடத்த ICC துணைத் தலைவர் இம்ரான் கவாஜா நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார். கிரிக்கட் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். இதன்படி அவர் ஜனாதிபதியின் பிரதானி சாகல ரத்நாயக்கவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினார்.

இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் விபரம்

இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ODI தொடரின் முதலாவது போட்டி ஜூன் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜூன் 4 ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. குறித்த 3 போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறும். இந்நிலையில் இப்போட்டித் தொடரில் கலந்து கொள்ளும் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி […]

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு…

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. டெலோன் பீரிஸ் தலைமையிலான இலங்கையின் வளர்ந்து வரும் அணி ஜப்பான் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான T20 தொடரில் இலங்கை அணி இணைய உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 5 T20 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுபுன் அபேகோனுக்கு அபார வெற்றி

இலங்கை குறுந்தூர சாம்பியனான யுபுன் அபேகோன் 2023 சீசனுக்கான வெற்றிகரமான தொடக்கத்தை பெற்றுள்ளார். இந்த ஆண்டு பங்கேற்ற முதல் பந்தயத்தில் யுபுன் முதலிடம் பிடித்தார். இத்தாலியில் நேற்று (07) நடைபெற்ற “FIRENZE SPRINT FESTIVAL” நிகழ்வில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் யுபுன் அபேகோன் ஐந்தாவது தடத்தில் போட்டியிட்டதுடன் ஆரம்பம் முதலே வெற்றிகரமாக ஓடிய யுபுன் நிகழ்வில் முதலாம் இடத்தைப் பெற்றார்.

தோனி இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளிடம் கோரிக்கை…

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரன டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டிய வீரர் அல்ல என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “நான் தனிப்பட்ட முறையில்  அவர் சிவப்பு-பந்து போட்டிகளில் விளையாடக்கூடாது என்று நினைக்கிறேன்.  அவர் மிகவும் வித்தியாசமான நபர். முக்கியமான தருணங்களில் அவரை எப்போதும் பயன்படுத்த முடியும். ஆனால் அவர் அனைத்து ஐசிசி போட்டிகளுக்கும் தகுதியானவர் […]

“நான் ரொனால்டோவின் ரசிகன்” பதிரன

ரொனால்டோவின் தீவிர ரசிகன் என CSKவின் நட்சத்திர பந்து வீச்சாளராக உருவாகி வரும் மதிஷா பதிரன தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை […]

ஜப்பானில் சாதிக்கும் இலங்கை மெய்வல்லுநர்கள்

இலங்கை மெய்வல்லுநரான அருன தர்ஷன 400 மீற்றர் ஓட்டத்தில் தனது சிறந்த காலப்பெறுதியை பதிவுசெய்துள்ளார். ஜப்பானில் நடைபெறும் மிச்சிதாகா ஞாபகார்த்த சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் அவர் இந்த ஆற்றலை வௌிப்படுத்தியுள்ளார். ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை அருன தர்ஷன 45 : 49 செக்கன்களில் பூர்த்திசெய்தார். இது இந்தப் போட்டிப் பிரிவில் அவரது சிறந்த காலப்பெறுதியாகும். சுகத் திலகரத்ன, ரொஹான் பிரதீப் குமார, பிரசன்ன அமரசேகர ஆகியோருக்கு பின்னர் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் இலங்கை […]