இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் சுட்டுக் கொலை

2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை இலக்கு வைத்து, பாகிஸ்தானின் லாஹூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய குழுவின் பிரதான சந்தேகநபர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள தேரா ஸ்மைல் கான் நகரில், பாகிஸ்தான் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இக்பால் அல்லது பாலி கயாரா என அழைக்கப்படும் ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர் பாகிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்பின் துணை பிரிவுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்பால் […]
உலகில் அதிக சம்பளம் பெறும் வீரர்கள்…

உலகில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது. 2023 இல் சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அவர் அதிக வருமானம் ஈட்டும் வீரர் ஆனார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில், அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே மூன்றாவது இடத்திலும் உள்ளனர். கடந்த 12 […]
மோதிக் கொண்ட கோலி – கம்பீர்

IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிரிக்கெட் அரங்கில் இது பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு BCCI இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது. IPL தொடரில் நேற்று முன்தினம் இரவு லக்னோவில் […]
அயர்லாந்தை அழ வைத்த இலங்கை

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. […]
நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான்

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற T20 தொடர் 2-2 என சமனிலையில் முடிந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. இறுதியில், பாகிஸ்தான் […]
தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் துரைசாமி விஜிந்த் மூன்று பதக்கங்கள் சுவீகரிப்பு

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற சர்வதேச தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக சென்ற நுவரெலியா மாவட்ட பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜிந்த் இண்டு தங்கப்பதக்கங்கள் ஒரு வெள்ளிப்பதக்கம் அடங்கலாக மூன்று பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளார். வேகநடை போட்டி மற்றும் பரிதிவட்டம் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கமும் சுற்றி எரிதல் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும் வெற்றி பெற்றுள்ளார்.குறித்த போட்டியில் இலங்கை உட்பட இந்தியா,பூட்டான்,பங்களாதேஷ்,நேபாள் போன்ற நாடுகள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
LPL : இதோ வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள்

நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை LPL அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் கீழே, மேற்கிந்திய தீவுகள் – டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட், ஜென்சன் சார்லஸ் மற்றும் ஆஷ்லி நர்ஸ் நியூசிலாந்து – மிட்செல் சான்டர், இஷ் சோதி, டிம் சிஃபட், டாரில் மிட்செல் […]
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில்

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி இன்று (25) பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளது. அவர்கள் மூன்று T20 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர், அந்த போட்டிகள் SSC மைதானத்தில் தில் நடைபெற உள்ளன. மேலும், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொழும்பில் சி.சி.சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஒரு நாள் போட்டிகள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கு நேரடியாகப் பொருந்தும் எனவும், போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறுவதாகவும் இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) மற்றும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் திகதியும்இ இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் ஜூன் 16 ஆம் திகதியும் நடைபெற உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ் தலைமையிலான 17 பேர் கொண்ட அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வோனர் அணியில் இடம்பிடித்துள்ளார். இதனிடையே […]
100 % பெறுவது இன்னும் சாத்தியமில்லை – திமுத்

திறமையான அணியொன்று இருந்தும் அவர்களின் திறமைகளை 100 வீதமாக பெறுவது இன்னும் சாத்தியமில்லை என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.