தென்னாபிரிக்கா சாதனை வெற்றி

தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற T20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்தது. T20 போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை துரத்தி வெற்றிப் பெற்று தென்னாபிரிக்கா அணி இந்த சாதனையை புரிந்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் ஜொன்சன் சார்லஸ் அதிகப்பட்சமாக 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் […]
ஜூபிடஸ் வெற்றி

(அந்துவன்) கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவலப்பிட்டி கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை மைதானத்தில் அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கொத்மலை வலய கல்விப்பனிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள், மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச […]
விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழு (PHOTS)

விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார். விளையாட்டு, கல்வி அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் கூடியதாக மேற்படி குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் தொகுதியைப் பார்வையிட இன்று (25) மேற்கொண்டிருந்த கண்காணிப்பு விஜயத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு […]
New Zealand won by 198 runs

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் (ODI) போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்க முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதனடிப்படையில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்ப்பில் பின் ஆலன் 51 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரன் 49 ஓட்டங்களையும், […]
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி எங்கு தெரியுமா?

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானில் நடத்தாமல் இருப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்றும், இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானுக்கு வெளியே நடைபெறும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் விரிசல் காரணமாக இந்திய […]
நாங்க ரெடி: தசுன்

நியூசிலாந்துடனான எதிர்வரும் ஒருநாள் மற்றும் T20 தொடருக்கு தயாராக இருப்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக்க தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து ஷனக்க கூறுகையில், “நாங்கள் நன்கு தயாராக உள்ளோம். மெத்திவ்ஸ் அணியில் இணைந்தது நல்ல விஷயம். இளம் வீரர்கள் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும். அதே நேரத்தில் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெறுவது […]
இந்தியா போராடி தோல்வி

இந்திய அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்களால் வென்றுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் (ODI) தொடரை அவுஸ்திரேலிய அணி 2-1 என கப்பற்றியுள்ளது. சென்னையில் இடம்பெற்ற நேற்றைய மூன்றாவது ODI போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 270 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த இந்திய அணி 49.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து […]
IPLல் : வியாஸ்காந்த்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு (RR) வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும், சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன. தற்போது IPL இல் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக […]
கரப்பந்தாட்ட போட்டிக்கான நுழைவு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

நமுனுகுல யூத் கிளப் நடத்தும் கரப்பந்தாட்ட போட்டிக்கான நுழைவு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் 1ம், 2ம் திகதிகளில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. போட்டிகள் இலங்கை கரப்பந்தாட்ட விதிமுறைகளுக்கு அமைய நடைபெறும் என போட்டி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
திமுத் எடுத்த முடிவு

எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். வெலிங்டனில் முடிவடைந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2 க்கு 0 […]