அரசியல்களத்திற்கு ரெடியாகும் மஹிந்த ! ஆடுகளத்தில் அதிரடி ஆட்டம்!

மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப் போட்டி இன்று (12) நுவரெலியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இவ்வருடம் இடம்பெற்றது. அனுருத்த ஹக்மான உள்ளிட்டோர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த போட்டியில் பங்குபற்றுவதற்காக கலந்துகொண்டனர். இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற […]
காலி டைட்டனஸை வீழ்த்திய தம்புள்ள ஆயோரா புள்ளி பட்டியலில் முதல் இடத்தில்!!

LPL2023 தொடரின் 14வது T20 போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்றது. காலி டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை ஆரோரா அணிகள் மோதின . இதில் தம்புள்ள ஆரோரரா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி தனது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது. காலி அணித்தலைவர் தசுன் சானக்க 36 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் துஷன் ஹேமந்த 2 விக்கட்டுகளை கைப்பற்றினார். […]
சாதனையாளர்களையும், வீரர்களையும் கௌரவித்த சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் !

நூருல் ஹுதா உமர் கழக உறுப்பினர்களுக்கான பாராட்டு, சர்வதேச அளவில் சாதனை புரிந்த சிறுமிகளுக்கான கௌரவம், கடந்த வாரம் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தினால் சந்தேங்கனி மைதானத்தில் வைத்து பெறப்பட்ட பெஸ்ட் XI ரீ10 சம்பியன் மற்றும் KSC T10 இரண்டாம் நிலை வெற்றி கிண்ணங்களை பெற்ற சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இளம் வீரர்கள் மற்றும் கழகத்திற்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தல் வேலைத்திட்டமும் கழகத்தின் முகாமையாளர் எம்.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் கழக தலைவர் எம்.பி.எம். […]
பங்களாதேஷ் அணியின் தலைமைப் பொறுப்பில் மீண்டும் ஷகிப் அல் ஹசன்

பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக மீண்டும் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசியக் கோப்பையிலிருந்து தமிம் இக்பால் விலகியதைத் தொடர்ந்து, அணித் தலைவர் பதவியைஅவர் ராஜிநாமா செய்தார். ஆசியக் கிண்ண போட்டித் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து, உலகக் கிண்ணத்திற்காக அந்த அணி இந்தியா செல்ல உள்ளது. அடுத்தடுத்து முக்கியமான சவால்கள் காத்திருக்கும் நிலையில், மீண்டும் அணித் தலைவர் பொறுப்பை ஷகிப் அல் ஹசன் ஏற்றுள்ளார். […]
இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லும் இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணி!

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இங்கிலாந்து பயணமாகிறது. அங்கு செல்லும் மகளிர் அணி இங்கிலாந்து தேசிய மகளிர் அணியுடன் 3 சர்வதே ஒருநாள் போட்டிகளிலும் 3 T20 போட்டிகளிலும் விளையாட உள்ளன முதலாவது T20 போட்டி ஆகஸ்ட் 31 ஆம் திகதி Hove ல் இடம்பெறுகிறது.
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் பிரன்டன் கிங் 42 ஓட்டங்களையும், ரோவம் பவல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் மூன்று விக்கட்டுகளை பெற்றுக் கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி […]
பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு சீருடை!

நூருல் ஹுதா உமர் பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வானது அக்னி விளையாட்டு கழகத்தின் செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் வினோஜன் தலைமையில் இன்று பனங்காடு விளையாட்டு மைதான கட்டிடத்தில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தனக்கென ஒரு இடத்தை வைத்துக் கொள்ளும் கழகமாகவும், பல சமூக, சமய செயற்பாடுகளில் அக்கறை காட்டும் கழகமாகவும் பனங்காடு அக்னி விளையாட்டு கழகம் திகழ்கின்றது. இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளையதம்பி ரவிராஜ் அவர்களின் நிதி பங்களிப்பில் இளையதம்பி கவிராஜ் […]
நிக்லஸ் பூரானின் அதிரடி ஆட்டம்! மே.தீவுகள் 2 விக்கட்டுகளால் வெற்றி!

இந்திய. மேற்கிந்திய தீவுகள் அணிகளுகிடையில் கானாவில் இன்று நடைப்பெற்ற 2 வது சர்வதேச T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. இதில் திலக் வர்மா நிதானமாக ஆடி 52. ஓட்டங்களை எடுத்தார். அதேபோன்று இஷான் […]
டுவிட்டர் பக்கத்தில் தனது நண்பர்கள் புகைப்படத்தை பதிவிட்ட சச்சின்

ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது நண்பர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர் இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தன்னுடைய நண்பர்களுடன் எடுத்த பழைய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,’ நட்பைக் கொண்டாடுவோம்! இன்று நண்பர்கள் தினம். இன்றைய தினத்தில் எனது நண்பர்களையும், […]
யாழ் கிங்ஸை திணற வைத்த ஹசரங்க!கண்டி அணி அமோக வெற்றி

LPL2023யின் 9 வது போட்டி பல்லேகலையில் இன்ற இரவு நடைப்பெற்றது. இதில் வனிந்து ஹசரங்க “சிங்கம் சிங்கிளாக வரும் ” என்ற தோரணையில் தனியான ஆட்டம் ஆடி யாழ் கிங்ஸை திணறடித்தார். நாணய சுழற்சியல் வெற்றிப்பெற்ற Be Love கண்டி அணி உடனடியாக யாழ் கிங்ஸை துடுப்பெடுத்தாட அழைத்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் கிங்ஸ் வனிந்து ஹசரங்கவின் துல்லியமான பந்தை எதிர்நோக்க முடியாமல் திணறியது. யாழ் கிங்ஸ் தமது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கள் […]