பாகிஸ்தான் அணி சம்மதம்…

உலக கிண்ண ODI கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா செல்ல சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி ஓக்டோபர் 15ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 48 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறும். இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நவம்பர் 19 திகதி நடைபெறும். பாகிஸ்தான் அணி இந்தியா செல்லுமா என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தது. கடைசியாக பாகிஸ்தான் 2016ம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியா […]
ODI உலக கிண்ண போட்டி அட்டவணை…

2023 உலகக் கிண்ண போட்டி அட்டவணையை ICC அறிவித்துள்ளது. இதன்படி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கிரிக்கெட் உலகக் கிண்ணம் விண்ணில்

2023 ஒரு நாள் உலகக் கிண்ண போட்டிகளை கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளதாக ICC தெரிவித்துள்ளது.. உலகக்கிண்ணம் பலூன் உதவியுடன் தரை மட்டத்திலிருந்து 120,000 அடி உயரத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்படி, எந்த விளையாட்டிலும் கிண்ண “ரிவர்சிங் கோலுக்கு” அனுப்பப்படுவது இதுவே முதல் முறை. கிண்ணம் இலங்கை உட்பட 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. 2023 உலகக் உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஒக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி

உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி புலவாயோவில் தொடங்க உள்ளது. இதுவரை இலங்கை அணி தாம் பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி B குழுவில் முதலிடத்திலும், ஸ்கொட்லாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இலங்கை சுப்பர் 06 சுற்றுக்குள்…

2023 ODI உலகக் குpண்ண தகுதிச் சுற்றுகளின் ஆரம்ப சுற்றுகள் முடிவடைவதற்கு முன்பே, 6 அணிகள் சூப்பர் 6 சுற்றில் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளன. அதன்படி, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து ஆகிய அணிகள் அந்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் தகுதி பெற்றன. சுப்பர் 6 சுற்றில் இலங்கை அணி சிம்பாபே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் விளையாடவுள்ளது.
மலையகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த கூட்டு பொறிமுறை

மலையகத்தில் உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் தேசிய மட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் பெறப்படும் எனவும் தெரிவித்தார். அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், அட்டன் பகுதிகளில் உள்ள உதைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர்களும், செயலாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொட்டகலையில் நடைபெற்றது. […]
இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு…

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றில் B குழுவின் கீழ் போட்டியிட்ட இலங்கை, ஸ்கொட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. குரூப் ஏ கீழ் போட்டியிட்ட மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் சிம்பாபே அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதன்படி இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து, சிம்பாபே ஆகிய அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு தெரிவாகின. உலகக் கோப்பை ஒருநாள் போட்டிக்கான தகுதிச் […]
சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்ற நாடுகள்

மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் போட்டியை நடத்தும் சிம்பாபே ஆகிய அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. உலகக் கிண்ண ஒருநாள் போட்டிக்கான தகுதிச் சுற்று சிம்பாபேயில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 02 பிரிவுகளின் கீழ் 10 அணிகள் களமிறங்கியுள்ளதுடன், போட்டி கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.
இலங்கை அணிக்கு சூப்பர் வெற்றி

ஓமான் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி களம் இறங்கிய ஓமான் அணி 30.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஓமான் அணி சார்பாக அதிக ஓட்டங்களாக 41 ஓட்டங்களை Ayaan Khan பெற்றார். இலங்கை அணி சார்பாக Wanindu Hasaranga, […]
2022 ஆம் ஆண்டிற்கான Slc நிதிநிலை அறிக்கை
2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, Sri lanka கிரிக்கெட் அந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா நிகர உபரியாக பதிவு செய்துள்ளது. அந்த வருடத்தில் கிரிக்கெட்டின் மொத்த வருமானம் 17.5 பில்லியன் ரூபாவாகும் எனவும், இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 120 வீத வளர்ச்சி எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கணக்கு அறிக்கை கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட […]