ரொனால்டோ புதிய சாதனை

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. நேற்று, ஐஸ்லாந்து அணிக்கு எதிரான யூரோ கிண்ண. கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் அவர் விளையாடினார். இது அவர் விளையாடிய 200வது சர்வதேச போட்டி. இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் கடந்த மார்ச் மாதம் படைத்திருந்தார். […]
ஆஷஸ் தொடரில் ஆஸி முன்னிலை

ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், அவுஸ்திரேலிய அணி 386 ரன்களும் எடுத்தன. 7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3 வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. 3வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் […]
பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர்

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இரண்டு போட்டிகளும் 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதலாவது போட்டி ஜூலை 20ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஜூலை 28 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணி ஜூலை 09 ஆம் திகதி இலங்கைக்கு […]
மேலும் மூன்று வீரர்கள் சிம்பாபேக்கு…

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாபேக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அவர்கள் ‘காத்திருப்பு விருப்பங்கள்’ அல்லது வழக்கமான வீரர் காயம் அடைந்தால் அணியில் சேர்க்க அனுப்பப்படுகிறார்கள் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி, டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லலகே மற்றும் சஹான் ஆராச்சி ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைய உள்ளனர்.
இலங்கை அணி அபார வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில், இலங்கை அணிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் இடையில் இன்று (19) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 73 […]
இந்துக்களின் பெரும் சமர்

கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான இந்துக்களின் 12வது கிரிக்கெட் பெரும்சமர் 2023 க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு கொழும்பு 08ல் அமைந்துள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (P Sara Oval), நடைபெற்றது. இந்துக்களின் பெருஞ்சமருக்கு ஒரு வரலாறு உண்டு. 1981 ஆம் ஆண்டிலேயே இந்துக்களின் கிரிக்கெட் பெருஞ்சமர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றால் ஆச்சரியம் தான். ஆனால் அதுதான் உண்மை. என்றாலும் நாட்டில் ஏற்பட்ட […]
சிம்பாப்வேயில் நாளை தகுதிச்சுற்று, இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ண இலங்கைக்கான தகுதிச் சுற்றுப் போட்டி நாளை (18) சிம்பாப்வேயில் தொடங்குகிறது. தகுதிச் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இரு அணிகளும் ஒருநாள் உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெறும். ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி சிம்பாப்வேயில் நடைபெறவுள்ளதுடன், அதற்காக 10 அணிகள் இரண்டு குழுக்களாகப் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 34 போட்டிகள் கொண்ட போட்டி ஹராரே மற்றும் புலவாயோவில் நடைபெறவுள்ளது. போட்டியில் […]
இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஒரு வருடத்துக்கும் மேலாக ஷாஹீன் ஷா அப்ரிடி டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டு, புதிய வீரர்களான மொஹமட்ஹரேரா மற்றும் ஆர்மர் ஜமால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது […]
உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கெஹானி தகுதி

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜிம்னாஸ்டிக் போட்டியில் இணைந்துகொண்ட மில்கா கெஹா 53 பெண் வீராங்கனைகள் மத்தியில் ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் பத்தாவது இடத்தை வென்றார். அதன்படி இந்த ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு மில்காதகுதி பெற்றார். பல சர்வதேச போட்டிகளில் அனுபவம் வாய்ந்த ஜிம்னாஸ்டிக் வீரரான மில்கா கெஹானி, 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இங்கிலாந்து 393 ஓட்டங்கள்

பெர்மிங்ஹமில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் முடிவில் நாளில் தமது முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 393 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது. இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களை பெற்று இன்றைய இரண்டாம் நாளில் துடுப்பெடுத்தாடவுள்ளது.