ஆஷஸ் டெஸ்ட்- இன்று ஆரம்பம்

இங்கிலாந்து -அவுஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பர்மிங்காமில் தொடங்குகிறது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி கடந்த வாரம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்ட பாணி, வலுவான அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இங்கிலாந்து […]
மாலிங்கவுக்கு புதிய பொறுப்பு

IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லசித் மாலிங்க மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லசித் மலிங்க இம்முறை பயிற்சியாளராக இணைந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள Major League Cricket T20 தொடரில் லசித் மலிங்க பந்துவீச்சு பயிற்சியாளராக இணைந்து கொள்ளவுள்ளார். தொடரில் கெய்ரன் பொல்லார்ட் MI அணியை வழிநடத்துவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசியக் கிண்ணம் இலங்கையில்…

2023 ஆசியக் கிண்ண போட்டிகளை இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இணைந்து நடத்த ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023 ஆசியக் கிண்ண போட்டிகள் ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 17 வரை நடைபெறும் என பேரவை இன்று (15) அறிவித்துள்ளது. இதன்படி 13 போட்டிகள் கொண்ட தொடரில் 04 போட்டிகள் பாகிஸ்தானிலும் 09 போட்டிகள் இலங்கையிலும் நடத்த ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை […]
LPL ஏலம்

LPL வீரர்கள் ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் தொடங்கியது. முதன்முறையாக நடைபெறும் எல்பிஎல் போட்டியின் வீரர் ஏலத்தில் 360 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 204 இலங்கை வீரர்களும் 156 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இந்த ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசிம் அக்ரம், இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திசர பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மாற்றங்களுக்கு தயாராகும் இந்திய டெஸ்ட் அணி?

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் எதிர்பார்த்ததை விட வேகமாக மாற்றங்களுக்கு தயாராகி கொண்டிருக்கிறது அல்லது தயாராக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. அதுவும் முக்கியமாக டெஸ்ட் அணி பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக இரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரு தோல்விகளும் ரோஹித் சர்மா, விராட் கோலி,புஜாரா உள்ளிட்டோர் தங்களது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி […]
IPL இல்லனா என்ன..LPL இருக்கு…

LPL ஏலப்பட்டியலில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஜூன் 14ம் திக தி கொழும்பில் ஏலம் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூலை 31ந் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடக்க சீசனில் இருந்து ஒரு சிறந்த வீரராக ஜொலித்தவர். அவர் ஐபிஎல்லில் 205 போட்டிகளில் விளையாடி 5,500 ரன்களை குவித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரெய்னா, ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் உள்நாட்டு […]
LPL ஏலத்தில் ஒரு அணி 16 முதல் 20 வீரர்களை வாங்கலாம்.

நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. அந்த தொடருக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு நாளை (14) கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் 200 தேசிய வீரர்களும், 160 வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். பிரபல இந்திய அறிவிப்பாளரான சாரு ஷர்மா இந்த ஏலத்தை நடத்துவார் என லங்கா பிரீமியர் லீக், போட்டிப் பணிப்பாளர் சமந்த தொடன்வெல தெரிவித்தார். சுமார் 500 வெளிநாட்டு […]
டென்னிஸ் தரவரிசை…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நோவக் ஜோகோவிச் வென்றுள்ள 23வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் […]
தங்க கிண்ண தொடரை கைப்பற்றியது யங்பேர்ட்ஸ் அணி.

நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான லீக் போட்டி தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 2022 ஆம் ஆண்டு 2023 ஆம் ஆண்டுக்கான தங்க கிண்ணம் மற்றும் வெள்ளி கிணங்களுக்கான பரிசளிப்பு விழா நுவரெலியா மாநகர சபை பொதுமைதானத்தில் இடம்பெற்றது. இதன் போது முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் இப்பரிசளிப்பு விழாவானது நடைபெற்றது. தங்கக் கிண்ண இறுதிப் போட்டியில் யங் பேர்ட்ஸ் மற்றும் […]
கில்லுக்கு அபராதம்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கில்க்கு அபராதம் விதிக்க ICC நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போட்டி கட்டணத்தில் 15மூ அபராதமாக வசூலிக்க கிரிக்கெட் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியா-அவுஸ்திரேலிய இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது நாளில், கேமரூன் கிரீனின் கேட்ச் மூலம் கில் ஆட்டமிழந்தார். அந்த கேட்ச் பற்றி கில் விமர்சனக் கருத்துக்களை தெரிவித்திருந்தார். போட்டியின் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவையான ஓவர்களை […]