பல்நோக்கு மருத்துவமனை தொடங்கிவைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி, குறுகிய காலத்தில் தனது மருத்துவ சேவையால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. திருவண்ணாமலை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்லும் வகையில் மிகப்பெரிய மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதன்பின்னர் மருத்துவமனையை […]

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன. இந்நிலையில், காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் வருகிற 30-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, […]

மகாராஷ்டிராவில் பயணிகள் தொடருந்தில் திடீரென தீ விபத்து

இந்தியாவின் மகாராஷ்டிரா – அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் தொடருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில் பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பாரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. குறித்த தொடருந்து அஷ்தி தொடருந்து நிலையத்திலிருந்து அகமதுநகர் தொடருந்து நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையிலே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் இதுவரையில் எந்த தகவலும் […]

செய்யூரில் தீயில் கருகிய ரூ.15 லட்சம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூரில் பத்திரப்பதிவு எழுத்தாளராக வேலை செய்து வருபவர் செய்யூர் பாளையர் மடம் பகுதியை சேர்ந்த தியாகு. இவர் தன்னுடைய அண்ணன் வீட்டு மாடியில் குடிசை அமைத்து அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நேற்று கர்ப்பிணியாக இருக்கும் தன்னுடைய மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக மேல்மருவத்தூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். நேற்று பகல் 12 மணி அளவில் அவருடைய குடிசை மின்கசிவு காரணமாக முழுவதும் எரிந்து சாம்பலானது. குடிசையில் தியாகு வீடு கட்டுவதற்காக […]

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த சேவை வர்த்தகத்தை மேம்படுத்தும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால பிணைப்பை வலுப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையை காணொளி மூலம் கொடியசைத்து ஆரம்பித்து வைத்த நிகழ்வின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்;டுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய விஜயத்தின் போது, இரண்டு […]

நாகை- இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த 10ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு கடந்த 7ம் தேதி வந்தது. இந்த கப்பல் சோதனை ஓட்டம் 8ம் தேதி நடந்தது. இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சென்ற கப்பல், அங்கிருந்து புறப்பட்டு நாகை திரும்பி வந்தது. கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை […]

மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை

மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் நெருப்பு வளைய கிரகணமாக தெரியும். இந்த நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வை காண முடியும். சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்வதால் உலகின் எந்த மூலையில் வசிப்பவர்களும் நாசா இணைய தளத்தில் காணலாம். இந்த நிகழ்வை காண வானியல் ஆர்வலர்களும், […]

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேரை கோவா போலீசார் கைது செய்தனர் பனாஜியின் புறநகரில் உள்ள போர்வோரிம் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் இவர்கள் பதுங்கி இருந்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை […]

மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – மு.க.ஸ்டாலின்

ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, ஏழுதேசம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் எல்.லெரின்ஷோ, த/பெ. கிளாரன்ஸ் என்பவர் 9-9-2023 அன்று ஓமன் நாட்டின் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு […]

காவிரி நதி நீர் எங்கள் உரிமை -சீமான்

காவிரி விவகாரம் 2024 தேர்தலில் பாதிக்குமா எனக் கேட்கிறார்கள், பாதிக்குமா இல்லை… நான் பாதிக்க வைப்பேன். தேர்தலில் ஒரு இடத்தில்கூட இந்த காங்கிரஸ், பா.ஜ.கவை வெல்ல விடாமல் தடுக்க வேண்டும்” – சீமான் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையில்லை, வறட்சியால் அணைகளில் நீர்வரத்து 53% குறைந்துவிட்டது, ஆகவே தமிழ்நாட்டுக்குத் தருவதற்கு, கர்நாடகாவிடம் தண்ணீரே இல்லை” எனப் பழைய புராணத்தை மீண்டும் வாசித்து, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளைக் காலில் போட்டு மிதித்து தமிழ்நாட்டுக்குத் தேவையான […]