உத்தர பிரதேசத்தில் பெண் போலீசை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜ்சங்கம் வரை சராயு எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி இந்த ரெயிலில் பெண் போலீஸ் ஒருவர் பயணித்தார். அப்போது பெண் போலீசை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பெண் போலீஸ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை மீட்ட பயணிகள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது […]

அமெரிக்க அரசு மேலும் தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்க வேண்டும்

அமெரிக்க அரசு மேலும் தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வருகிறார். உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா […]

கனேடிய பிரஜைகளுக்கு விசா வழங்கும் சேவைகளை இடைநிறுத்திய இந்திய மத்திய அரசு!!

  இந்தியா வரும் கனேடிய பிரஜைகளுக்கான விசா சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய  மத்திய அரசு அறிவித்துள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதில் கனடா நாட்டில் உள்ள இந்து கோவில்கள் மீது அதிக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காலிஸ்தான் ஆதரவு குழுக்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், கனடாவில் உள்ள […]

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இன்று மற்றும் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், […]

கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி டெபாசிட்

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த நிலையில் தன்னை யாரோ ஏமாற்றுவதாக நினைத்த ராஜ்குமார், நண்பரின் வங்கி கணக்கிற்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பி 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதை உறுதி செய்துள்ளார். இதையடுத்து தவறுதலாக பணம் செலுத்தப்பட்டதாக டிரைவரை தொடர்பு கொண்டு வங்கி தரப்பு விளக்கமளித்தது. மேலும் செலவு செய்த 21 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டாம் […]

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் மோதல் இடம் பெறுவதற்கான சூழ்நிலை

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங், இந்தோ பசுபிக்கில் முன்னர் காணப்பட்ட நிலையை விட தற்போது மோதல் இடம்பெறுவதற்கான ஆபத்துக்கள் அதிக அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளார். பல வருடங்களிற்கு முன்னர் காணப்பட்டதை விட பிராந்தியத்தில் மோதலிற்கான அதிக ஆபத்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். உலகம் பல வருடங்களாக பார்த்திராத ஆபத்தான மூலோபாய சூழ்நிலைகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த நாடும் ஆக்கிரமிக்காத எந்த நாடும் ஆக்கிரமிக்கப்படாத நிலையை உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலந்தில் சடலமாக மீட்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள்

போலந்தில் குடியிருப்பில் இருந்து 3 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ள 54 வயது Piotr மற்றும் 20 வயது Paulina ஆகிய இருவரும் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டியில் இருந்த தந்தை மற்றும் மகள் மீது சந்தேகம் இருந்து வந்ததாகவே அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்த நிலையிலேயே பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு 3 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மிக மோசமாக அழுகிய நிலையில் […]

சாதியை காரணம் காட்டி கோயிலில் ஓரம் கட்டப்பட்ட அமைச்சர் இராதா கிருஷ்ணன்!!

ஐந்து முறை திருச்சூர் சேலக்கரை சட்டமன்றத் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.ராதாகிருஷ்ணன். கேரளாவில் CPI(M) கட்சியின் முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், பினராயி விஜயன் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், அறநிலையத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். பட்டியலின சமூகத்திலிருந்து வந்த ஒருவரையே அறநிலையத்துறை அமைச்சராக நியமித்த இந்த முடிவை புரட்சிகரமான மாற்றம் என மக்கள் அன்று பாராட்டினர் ஆனால், தற்போது அவருக்கே கோயிலில் சாதிய பாகுபாடு நடந்திருக்கிறது என்பது பலரையும் […]

சீமான் மீதான வழக்கு 11 ஆண்டுகள் நிலுவையில்

தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற பிறகும் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக போலீசார் விளக்கம் […]

பிச்சையெடுத்து கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். அவர் லண்டன் நகரில் வீடியோ இணைப்பு வழியே பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியா நிலவை அடைந்து, ஜி-20 உச்சி மாநாட்டு கூட்டங்களை நடத்தி கொண்டிருக்கும்போது, பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாக சென்று நிதிக்காக பிச்சையெடுத்து கொண்டிருக்கிறார். இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் அடைய முடியவில்லை? இதற்கு யார் பொறுப்பு? என […]