ஐ.நா. கூட்டத்தொடரில் அமைதி திட்டம் பற்றி பேசிய ஜெலன்ஸ்கி

ரஷியாவுடன் பகைமை தொடர்ந்த போதிலும், 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் அமைதி திட்டம் பற்றி ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். அவர் கூட்டத்தொடரில் தொடர்ந்து பேசும்போது, நவீன வரலாற்றில் முதன்முறையாக, தாக்குதலுக்கு உள்ளான தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உண்மையில் ஒரு வாய்ப்பு எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார். சவுதி அரேபியா கடந்த மாதம் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், ரஷிய ஆக்கிரமிப்பால் மீறப்பட்ட, சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறையை மீட்டெடுப்பதற்கான அமைதி திட்டம் ஒன்றை […]

அமெரிக்காவில், அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், பூட்டிய வீட்டிற்குள் ஒரு தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள், அவர்கள் வளர்த்த மூன்று நாய்கள் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டினர்கள் ஒருநாள் முழுவதும் வீட்டில் இருந்து வெளியே வராததாலும், வீடு பூட்டியே கிடந்ததாலும் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து சிகாகோ பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் குடும்பத்தினரும் நாய்களும் இறந்து கிடந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த தம்பதி தங்களது […]

நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் நிலநடுக்கம்

நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் பல பகுதிகளில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லைஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட கர்நாடக ஒய்சாலா கோவில்கள்

கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோம்நாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இதனால், இந்தியாவின் 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து கிடைத்து உள்ளது. இதுபற்றி யுனெஸ்கோ வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து […]

சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிய வடகொரிய அதிபர்

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால், எரிபொருள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், ரஷியாவுக்கு, சீன வெளியுறவு மந்திரி வாங் யி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று ரஷியாவை சென்றடைந்த அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கேவை நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி ரஷியாவின் வெளிவிவகார அமைச்சகம் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெளியுறவு […]

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்திக்குள் கத்திக்குத்து

ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திக்குள் நுழைந்த 24 வயது இளைஞன் ஒருவர் இரண்டு மாணவிகள் உட்பட மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளர். இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்த பொலிஸார் இளைஞரை சம்பவ இடத்திலேயே வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் அந்த பல்கலைக்கழக மாணவர் இல்லை என தெரிவித்த பொலிஸார் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் விசாரித்து வருகின்றனர். குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.     […]

அமெரிக்காவின் 80 மில்லியன் டாலர் மதிப்புடைய இந்த விமானம் எங்கே …..??

அமெரிக்கா தனது எப்.35 பி என்ற அதி நவீன போர் விமானத்தை காணவில்லை என்று அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய விமானப் படை கொண்டுள்ள அமெரிக்காவின் 80 மில்லியன் டாலர் மதிப்புடைய இந்த விமானம் எங்கே போனது என்று அறிந்துகொள்ள முடியாமல் ராணுவம் திணறி வருவதாக தெரிவித்துள்ளது. தென் கரோலினா கடலோரம் இந்த விமானம் சென்ற போது தொடர்பு அறுந்து மாயமாகி விட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஆட்டோ மோடில் இருந்ததாகவும் விமானி பாராசூட் மூலம் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வித்தை காட்டிய ” யூடியூபர்” வாசன் கைது!

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்துக்குள்ளாகி தலைமறைவான பிரபல யூடியூபர்  டி.டி.எஃப்.வாசன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிணையில் வெளிவராத வகையில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிப்புரம் பொலிஸார் கூறினர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது மோட்டார் சைக்களில்  கோவை நோக்கி நேற்று முன்தினம் (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தனது வாகனத்தில் […]

ஈரானில் மாஷா அமினியின் ஓராண்டு நினைவு தினம்….

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசாரால் இளம்பெண் மாஷா அமினி கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமைக்குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்த போராட்டங்கள் தொடர்பாக 7 மரண தண்டனைகள் […]

வானில் ஆதிக்கம் செலுத்தும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா

வானில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவியது. இந்த செயற்கைக்கோள் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும், யோகன் (Yaogan) 39 லாங் மார்ச்-2D கேரியர் ராக்கெட் மூலம் 12:13 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) ஏவப்பட்டது மற்றும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். :