ரஷிய அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் உதவி

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால், உக்ரைன் – ரஷியா போர் ஒரு ஆண்டைக் கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, போருக்கு மத்தியிலும் ரஷிய அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து […]

வங்காளதேசத்தில் டெங்கு- 804 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரித்து காணப்படுகிறது. இதன்படி, சுகாதார சேவைகளின் பொது இயக்குநரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த ஆண்டில் டெங்குவுக்கு 804 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு பாதிப்புக்கு நேற்று காலை வரை, கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர் என டாக்கா ட்ரிபியூன் பத்திரிகை தெரிவிக்கின்றது. இதற்கு முன் 2022-ம் ஆண்டில் 281 பேர் உயிரிழந்து இருந்தனர். இதுவே அதிக எண்ணிக்கையாக இருந்தது. […]

பிரேசில் விமான விபத்து 14 பேர் பலி

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். அந்நாட்டின் அமேசான் மாகாணம் மனஸ் பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் 14 பேருடன் சிறிய ரக விமானம் பார்சிலோஸ் நோக்கி புறப்பட்டது. கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில் விமானம் பார்சிலோசில் தரையிறங்கியபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசாமில் ஒரே நாளில் 1 கோடி மரக்கன்றுகள் நடப்படும்

அசாமில் மாநிலம் முழுவதும் அமுத விருட்ச அந்தோலன் என்ற திட்டத்தின் கீழ், வர்த்தக ரீதியாக பலனளிக்க கூடிய 1 கோடி மரக்கன்றுகளை செப்டம்பர் 17-ல் (இன்று) நட வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டம் தொடங்க முடிவானது. இதற்கான நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில், முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மத்திய மந்திரி பிரகலாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்படி, 53 வர்த்தக அளவில் பயனளிக்க கூடிய மர இனங்களை தேர்ந்தெடுத்து, இன்று ஒரே நாளில் […]

இலங்கை தமிழர்களின் புதிய வீடுகளை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்! 80 கோடி செலவில் 1591 வீடுகள்!

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப்டம்பர் 17) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் 13 […]

விஸ்வகர்மா திட்டம் இன்று தொடங்குகிறது.!

13 ஆயிரம் கோடியில் பிரதமர் மோடி அறிவித்த விஸ்வகர்மா திட்டம் இன்று தொடங்குகிறது. இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த நாள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். அடுத்த நாளே ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது.   அதில் இந்த திட்டத்திற்கு ரூ 13 ஆயிரம் கோடி நிதி […]

 விமான நிலையத்தில் பயணிகளின் பைகளை திருடும் அதிகாரிகள்

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பைகளில் இருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடும், பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் இருவர் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் மியாமி விமான நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. விமான நிலையத்தில் பரிசோதனைக்காக, எக்ஸ்ரே இயந்திரத்திற்கு காத்திருக்கும் பயணிகளின் பைகளில் இருந்து, பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை 2 அதிகாரிகள் திட்டமிட்டு களவாடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. […]

கெர்சன் பகுதியில் பொதுமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தல்

உக்ரைனின் தெற்கு கெர்சன் (Kherson) பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கெர்சனில் உள்ள உக்ரேனிய பிராந்திய பாதுகாப்பு ஆலோசகரால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யப் படைகள் தொடர்ந்து அப்பகுதியில் ஷெல் தாக்குதல் நடத்தி வருவதால், பொதுமக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை , ரஷ்யா ஏற்கனவே உக்ரைனின் கெர்சனைக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜோ பைடனின் மகனுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையா…?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்ட்டருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பைடனின் மகன் ஹன்ட்டர் மீது 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாகவும் கடுமையான போதைப் பொருள் மயக்கத்தில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதித்துறை சிறப்பு வழக்கறிஞர் டேவிட் வெய்ஸ் உடன், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹன்ட்டர் சமாதான முயற்சி மேற்கொண்டாலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேசமயம் வரி ஏய்ப்பு குற்றத்தை ஏற்று […]

பெரு நாட்டில் எட்டு ஊசிகளை விழுங்கிய 2 வயதுச் சிறுவன்

பெரு நாட்டில் எட்டு ஊசிகளை விழுங்கிய 2 வயதுச் சிறுவன் தப்பி உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் தாயார் வேலைசெய்யும் பண்ணையில் விளையாடியபோது Hypodermic ஊசி எனும் தோலுக்கு அடியில் மருந்தேற்றும் சிறு ஊசிகளை விழுங்கியுள்ளார். மேலும், குறித்த தடுப்பூசி பண்ணையில் மாடுகளுக்கு போட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. சிறுவனுக்கு உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுவனின் வயிற்றிலும் குடலிலும் இருந்து ஊசிகள் மீட்கப்பட்டன. தற்போது சிறுவன் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.