சீனாவில் சரிந்து விழுந்த ராட்சத டவர் கிரேன் – 6 தொழிலாளர்கள் பலி

சீனாவின் ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இந்த பணி நடைபெற்று கொண்டிருந்த போது ராட்சத டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கோதுமை விலை ………??

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை விலை அதிகரித்ததை தொடர்ந்து விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக கோதுமை பதுக்கலை தடுப்பதற்காக பெரும் வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது கோதுமை மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பெரும் வணிகர்கள், அதிகபட்சமாக 3,000 டன் கோதுமையே இருப்பு வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கோதுமை விலை குறைந்தது. ஆனால் கடந்த […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது; “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் பிறந்த மண்ணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தாய்க்குலத்தின் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் பக்கபலமிருந்து தக்கபயன் நல்குவதாகும். திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும். இந்தியாவின் பிற மாநிலங்களும் தளபதி ஏற்றி வைக்கும் இந்தத் திருவிளக்கில் தீபமேற்றிக் கொள்ளலாம்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். […]

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 17 மீனவர்களின் விடுதலைக்கான நடவடிக்கையை எடுங்கள்! தமிழக முதல்வர் வேண்டுகோள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர் கதையாகிவருகிறது. இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்திவருகிறது. மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்த […]

ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம்..? அமெரிக்கா எச்சரிக்கை

கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகளாக போரானது நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து, போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றன. இதில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. எனினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷியாவுக்கு பயணம் செய்தது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் […]

லெபனான் அகதிகள் முகாமில் மோதல் – 6 பேர் பலி

லெபனான் நாட்டில் சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளத அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன. ஐன் எல்-ஹில்வெ என்ற இந்த முகாம், பதா இயக்கத்தினரால் நடத்தப்படுகிறது. இதன் தலைவர் கடந்த ஜூலை மாத இறுதியில் முகாமில் பலியானார். அவரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், முகாமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 7-ந்தேதி முதல் முகாமில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த மோதலில் ஆயுதமேந்திய […]

இன்று சிங்கப்பூரில் அதிபராக பதவியேற்கிறார் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று (வியாழக்கிமை) பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து,கடந்த 1-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் “கடல் தொடர்ந்து டசன் கணக்கான உடல்களை வீசுகிறது”

“கடல் தொடர்ந்து டசன் கணக்கான உடல்களை வீசுகிறது” – லிபியாவின் கிழக்கு நிர்வாக மந்திரி லிபியாவின் கிழக்கு நிர்வாக மந்திரி ஹிஷாம் சிகியோவாட், “கடல் தொடர்ந்து டசன் கணக்கான உடல்களை வீசுகிறது” என்று கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் உடல் பைகளில் சுற்றப்பட்டு, மற்றவர்கள் வெகுசன புதைகுழிகளில் புதைக்கப்படுவதால், மனிதாபிமான ஆதரவிற்கான அவநம்பிக்கையான அழைப்புகள் உள்ளன. டேனியல் புயல் கடந்த (10.09.2023)போது அணை உடைந்ததால், சுனாமி போன்ற வெள்ளம் டெர்னா வழியாகச் சென்றது. மீட்புக் குழுக்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின் […]

2023-ம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 6 எழுத்தாளர்கள் தேர்வு

உலகளாவிய கலாசாரத்துக்கு சிறந்த பங்களிக்கும் கதைகளுக்கு பிரிட்டிஷ் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உலகின் எந்த நாடு, மொழியை சேர்ந்த படைப்புகளாக இருந்தாலும் அவை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு இங்கிலாந்தில் வெளியிடப்படும். பின்னர் அவற்றில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதன் எழுத்தாளருக்கு சுமார் ரூ.25 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் 2023-ம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் `கோர்டிங் இந்தியா’ என்ற கதைக்காக இங்கிலாந்தில் […]

இந்தியாவில் நடந்து முடிந்த ஜி-20 மாநாடு, மிகப்பெரிய வெற்றி – அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத்துறைசெய்தித்தொடர்பாளர் மாத்யு மில்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவில் நடந்து முடிந்த ஜி-20 மாநாடு, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அது வெற்றி என்று நிச்சயமாக நம்புகிறோம். முதலில், ஜி-20 பெரிய அமைப்பு. அதில் ரஷியா உறுப்பினராக இருக்கிறது. சீனா உறுப்பினராக இருக்கிறது. பல நாடுகள் மாறுபட்ட கருத்துகள் கொண்டுள்ளன. இருப்பினும், பிற நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என்றும், அதை மீறக்கூடாது என்றும் அழைப்பு விடுக்கும் அறிக்கையை ஜி-20 அமைப்பால் […]