வியட்நாம் தீ விபத்தில் பலர் உயிரிழப்பு

வியட்நாமில் இடம்பெற்றுள்ள தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் தலைநகர் ஹனோயில் 150 பேர் தங்கியிருந்த 9 மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தீவிபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் அதிகாரிகள் இன்னமும் விபரங்களை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சிப்ஸ் விற்பனைக்கு தடை

அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் மிக அதிகமான காரமுள்ள சிப்சை உட்கொண்ட உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப்ஸ் சாப்பிடும் சவால் என்று சிப்ஸ் நிறுவனம் ஒன்று சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளது. அதைப் பார்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து மிக அதிக காரம் நிறைந்த சிப்ஸ் பாக்கெட் ஒன்றை மசாசூசெட்ஸ் நகரைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா என்ற 14 வயது சிறுவன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த சிப்ஸை சாப்பிட்டு விட்டு பள்ளி சென்றதாக கூறப்படும் […]

காவிரி நீர் விவகார சர்ச்சை மீண்டும்! இன்று கர்நாடக அனைத்து கட்சி கூட்டம்!

காவிரி நதிநீர் விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடகா அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று கூட்டியுள்ளார் காவிரி நதிநீர் விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடகா அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று கூட்டியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் இறுதியில் கூடியது. அந்தக் கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு இதே கோரிக்கையை முன்வைத்தது. வழக்கம் போல கர்நாடகா அரசு தரப்பில் “பஞ்சபாட்டு’ பாடப்பட்டது. ஒருவழியாக வெறும் 5,000 கன […]

கேரளாவில் நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் இருந்ததால், இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நிபா வைரசால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இறந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் ஆய்வுக்காக புனேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலையில் அதன் முடிவுகள் வெளியாகும். அதன்பிறகே, […]

காவிரி நதி நீர் பிரச்சினைக்கு மேகதாது அணை மட்டுமே ஒரே தீர்வு

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. இரு மாநிலங்கள் இடையே நிலவும் காவிரி நதி நீர் பிரச்சினைக்கு மேகதாது அணை மட்டுமே ஒரே தீர்வு. ஆனால் இதற்கு மத்திய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கவில்லை. மேகதாது திட்டத்தை தமிழகம் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை. மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு காவிரி […]

ஆப்பிரிக்காவில் கனமழை, வெள்ளப்பெருக்கில் பலர் மாயம்

தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா. உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், லிபியாவை டேனி புயல் தாக்கியது. மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. புயலுடன் கனமழையும் கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக […]

ஸ்பெயினில் ரயில் மோதி மூன்று பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் ரயில் கடவையை கடக்க முயன்ற போது ரயில் மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (11-09-2023) பார்சிலோனா நகரில் உள்ள மாண்ட்மெலோ பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் 7 பேர் ரயில் கடவை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயில் என்ஜின் அவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த […]

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டமான ‘சக்தி’ திட்டம் உள்பட 5 உத்தரவாத திட்டங்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் உத்தரவாத திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘சக்தி’ திட்டத்தை மாநில அரசு தொடங்கியது. அன்றைய தினம் முதல் […]

அமெரிக்காவில் துப்பாக்கி கொண்டு செல்வதற்கு தடை

அமெரிக்காவில் கடந்த 6-ம் திகதி அங்குள்ள அல்புகெர்கி பகுதியின் கூடைப்பந்து மைதானத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறான நிலையில் இதுபோன்ற துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் நியூ மெக்சிகோ மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் அடுத்த 30 நாட்களுக்கு துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்பிறகு மீண்டும் இந்த உத்தரவு நீட்டிக்கப்படலாம் […]

மாலத்தீவு தேர்தலில் 2-வது சுற்று தேர்தல் நடத்த முடிவு

மாலத்தீவு நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் 2-வது சுற்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசிய நாடான மாலத்தீவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பிரதான எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியில் சார்பில் முகமது முயிஸ் போட்டியிடுகிறார். இவர்கள் […]