நைஜர் ஆற்றில் படகு விபத்து

நைஜீரியா நாட்டின் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று 100 பேர் படகில் பயணம் மேற்கொண்டனர். அண்டை நகரில் விவசாய பணிக்காக இவர்கள் படகில் பயணம் செய்தனர். நைஜர் ஆற்றில் பயணம் மேற்கொண்டபோது இவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் சிக்கித்தவித்த 30 பேரை உயிருடன் மீட்டனர்.

இத்தாலியில் நடைபெற்ற பைக் பந்தயத்தில் – ஜார்ஜ் மார்டின் முதலிடம்

ஸ்பெயின் நாட்டின் ஜார்ஜ் மார்டின் இத்தாலியில் நடைபெற்ற சான் மரினோ கிராண்ட் பிரி மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜார்ஜ் மார்டின் பந்தய தொலைவை 42 நிமிடத்தில் தனது டுகாட்டி பைக்கில் கடந்து வாகை சூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை விட ஒன்றரை வினாடி தாமதமாக வந்த மார்கோ பெஸேச்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா டிரோன் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக வானில் சுமார் 2 மணித்தியாலத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது. கீவ் நகரின் மீது சுமார் ஐந்து முறை குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. குறித்த தாக்குதலால் டார்னிட்ஸ்கி, சோலோமியான்ஸ்கி, போடில் உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கீவ் நகர மேயர் […]

இறுதி ஊர்வலத்தில் விபத்து 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

தென்கிழக்கு துருக்கியின் கஹ்ராமன்மாராஸ்-ஆண்டிரின் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இறுதி ஊர்வலமும் நடைபெற்றது. இந்தநிலையில் லாரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் முன்னால் சென்ற கார் மீது மோதிய லாரி பின்னர் இறுதி ஊர்வலம் சென்ற கூட்டத்துக்குள் புகுந்தது. எனவே அதில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 25 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

மொராக்கோ நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேர் பலி

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு மொராக்கோ. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த நிலநடுக்கத்தால் அதிர்வினை உணர்ந்தவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும் […]

ஜீ 20 மண்டபத்தில் வெள்ளம்!ஊழலின் உச்சம்!உதயநிதி குற்றச்சாட்டு!!

  அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.   இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பாஜகவிடம் இருந்து கடும் […]

ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இந்திய பிரதமர் மோடி

உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி அறிமுகம் செய்யப்படும் என ஜி20 மாநாட்டில் இந்தியா அறிவித்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதம் வரை அதிகரிக்க, உலக அளவில் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்கள் முன்மொழிவு. இதற்காக உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி அமைக்கப்படும். […]

ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க ஒன்றியம்

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். அப்போது ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக முன்மொழிந்தார். உலகத் தலைவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர அழைக்கிறேன்” என்றார். இதையடுத்து ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அழைத்து வந்தார். ஜி20 தலைவர்களுக்கான இருக்கை வரிசையில் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருக்காக தனி […]

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 820 ஆக உயர்வு

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ நாட்டில் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இதனிடையே, இந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. […]

கீரீஸ் நாட்டில் ‘டேனியல்’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு

கீரீஸ் நாட்டில் ‘டேனியல்’ சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1930-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பிறகு தற்போது அங்கு மீண்டும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில் குடியிருப்புகள் நீருக்குள் மூழ்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் […]