மொரோக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அத்துடன் சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. […]

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கைது காரணமாக திருப்பதி சென்ற தமிழக பக்தர்கள் சிரமத்தில்

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு முதலமைச்சராக இருந்த போது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் மூவாயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பில் ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற அமைப்புடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.  இந்த திட்டத்தில் மாநில அரசு பத்து சதவீத பங்கை செலுத்த வேண்டிய நிலையில் மாநில அரசின் பங்குத் தொகையில் 240 கோடி […]

உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி – அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய […]

இந்தியாவிற்கு வருகை தர உள்ள உலக நாடுகளின் தலைவர்கள்

ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்த நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், இந்தியாவிற்கு வருகை தர இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் நடைபெறும் […]

தெற்காசிய நகைக்கடைகளை குறிவைத்து ஆயுதம் ஏந்தும் கும்பல்

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாகாணங்களான நியூயார்க், நியூ ஜெர்சி, வெர்ஜீனியா, புளோரிடா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் இந்தியா மற்றும் தெற்காசிய நகைக்கடைகளை குறிவைத்து ஆயுதம் ஏந்திய கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இதுகுறித்து நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. மர்மகும்பலுக்கு வலைவீசி தேடியது. இந்தநிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தகவல் தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை கைது செய்த அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். […]

பிரேசில் புயலில் அடித்து செல்லப்பட்ட 2300 வீடுகள் ?

பிரேசில் கடந்த திங்கட்கிழமை இரவு தாக்கிய பெரும் புயலால் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன. குறித்த புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு ஒரே வீட்டில் 15 பேரின் உடல்களை மீட்புப் படை வீரர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 20 கோடி ரூபா பெறுமதியான “ஐஸ்” போதைப்பொருளுடன் ராமநாதபுரத்தில் இருவர் கைது!

ராமேஸ்வரம் அருகே வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த இந்திய நாணயப்படி  சுமார் 20 கோடி மதிப்பிலான 6 கிலோ ஐஸ் போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ராமநாதபுர டி.எஸ்.பி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இருவர் கடல்வழியாக இலங்கைக்கு கொண்டு செல்ல இருந்த  ” ஐஸ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் இருவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் விசாரணை செய்யப்பட்டுவருவதாக டி.எஸ்.பியின் அலுவலகம் கூறுகிறது.

வட்டி வீதம் தொடர்பில் – மத்திய வங்கி

கனடாவில் வட்டி வீதங்களை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி வங்கி வட்டி வீதங்கள் ஐந்து வீதமாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்துவதற்கு கால அவகசாம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. வட்டி வீதத்தை உயர்த்த வேண்டாம் என இரண்டு மாகாணங்களின் முதல்வர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவுக்கு செல்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு சென்றுள்ளார். அவரது இந்த வெளிநாட்டுப் பயணம் இந்திய அயலக காங்கிரஸ்(ஐ.ஓ.சி.) மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி இன்று பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு சென்றடைந்துள்ளார். அங்கு 7-ந் தேதி ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து நாளை(8-ந் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார். அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார். தொடர்ந்து 9-ந் தேதி, பாரீஸ் நகரில் நடக்கும் […]

ஆதித்யா எல்-1′ கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ 

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) கடந்த 2-ந்தேதி ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் தொடர்ந்து வருகிறது. […]