பிரேசிலை தாக்கிய புயல் – அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம்

பிரேசில் நாட்டை கடந்த திங்கள்கிழமை இரவு பெரும் புயல் ஒன்று தாக்கியது. இதனால் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன. புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு ஒரே வீட்டில் 15 பேரின் உடல்களை மீட்புப் படை வீரர்கள் மீட்டு உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் […]

நெதர்லாந்தில் அப்பாவி இந்திய மாணவியை தாக்கிய ஆப்பிரிக்க பெண்கள்! தடுக்காமல் வீடியோ எடுத்த கலியுக வாரிசுகள்!

நெதர்லாந்தில் ஒரு கடையின் முன்பு இந்திய பெண் ஒருவரை ஆப்பிரக்க பெண் மற்றும் அவருடன் இருந்த பெண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி  வருகிறது. An INNOCENT Indian student mobbed by African people (Black people), gets robbed and beaten by the crowd. War between immigrants. ATROCIOUS pic.twitter.com/n1jiN7J9pK — Epic Rage Fights (@epic_rage_fight) September 6, 2023 […]

பணி நேரத்தில் ஐ போன்களை பயன்படுத்த வேண்டாம் – சீனா

பணி நேரத்தில் ஐ போன்களையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அரசாங்க ஊழியர்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. இத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது கவலையை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சீனா – அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐ போன்கள், ஐ பேடுகளை வேலை நோக்கங்களுக்காக […]

அபுதாபி லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசை பெற்ற இலங்கையர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹத்தை (சுமார் 175 கோடி இலங்கை ரூபா) லொத்தர் சீட்டிழுப்பில் வென்றுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரைலிங்கம் பிரபாகர் என்ற இலங்கையர் அபுதாபி லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசை பெற்றுள்ளார். அதேசமயம் இந்த லொத்தர் சீட்டிழுப்பில் இரண்டாம் பரிசை இந்திய பிரஜையான செல்வராஜ் தங்கையன் பெற்றுள்ளார். துரைலிங்கம் பிரபாகர் 16 வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தமாக அபுதாபி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் நீரில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

பிரித்தானியாவில் சிறுவர்களை காப்பாற்ற சென்று நீரில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 27 வயதுடைய தமிழ் இளைஞரே உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்க ஏரியில் குதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில் சுமார் 7 மணியளவில் நீருக்கடியில் செயற்படும் கமெராவினால் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இளைஞரின் மறைவை அடுத்து அவர் செயல்பட்டு […]

பூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு

டோக்கியோ, இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவைகளை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பூமியை போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா மற்றும் டோக்கியோவில் உள்ள ஜப்பானின் தேசிய […]

ஐ.எஸ் அமைப்பின் தலைவரொருவர் சென்னையில் கைது! ஆவணங்கள் சிக்கின

சென்னையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள திருச்சூரைச் சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராக கருதப்படும்  சையது நபிலை தேசியப் புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா என மாறி மாறி தலைமறைவாக இவர் இருந்துள்ளார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சையது நபில், நேபாளம் தப்ப முயன்றபோது என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து ஐ.எஸ் அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் […]

நியூமேனில் உள்ள நெடுஞ்சாலைக்கு இந்தியர் பெயர்

கலிபோர்னியாவின் நியூமேனில் உள்ள நெடுஞ்சாலைக்கு உயிரிழந்த இந்தியர் ரோனில் சிங் நினைவாக ‘கார்ப்ரல் ரோனில் சிங் நினைவு நெடுஞ்சாலை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிஜி தீவு பகுதியில் வசித்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியான இவர் கலிபோர்னியா மாகாணத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த மர்மநபர் ஒருவர் ரோனில் சிங்கை சுட்டுக்கொன்றார். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய பாலோ விர்ஜென் மெண்டோசா […]

அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருக்கிறது

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலகின் முதலிடத்திலுள்ள பில்லியனருமான எலோன் மஸ்க் தனது பிரமாண்டமான திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் முதன்மையானவர். மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் தனியார் ஸ்பேஸ் ஷட்டில் ஸ்டார்லிங்க் சேவை உட்பட பல முக்கிய நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் மஸ்க், கடந்த ஆண்டு உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரையும் சுமார் ரூ.37,000 கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார். “எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்” என தலைப்பிடப்பட்ட அந்த […]

அமைக்கப்பட்டிருந்த செல்போன் கோபுரத்தை காணவில்லை……….

திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு பரந்தாமன் என்பவரது இடத்தில் ரூ.10 லட்சம் செலவில் தனியார் செல்போன் கோபுரம் சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஒப்பந்ததாரர் மூலம் அமைக்கப்பட்டது. அதேபோல் நடுக்குத்தகை பவானி நகரில் குமரேசன் என்பவரது இடத்தில் ரூ.26 லட்சம் செலவில் மற்றொரு செல்போன் கோபுரமும் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் செல்போன் கோபுரம் பராமரிக்காமல் விட்டனர். அதன் பிறகு புதிதாக கிருஷ்ணமூர்த்தி என்பவரை அந்த நிறுவனம் […]