அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வரும் Egg Crack Challenge

அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வரும் Egg Crack Challenge என்ற அ இணையச் சவால் குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். “விளையாட்டுதானே… இதில் என்ன இருக்கிறது?” என்று சிலர் கேட்கலாம். ஆனால் விளையாட்டு என்ற பெயரில் பிள்ளைகளை உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்திவிடக்கூடாது என்று பிள்ளைகளுக்கென பல்வேறு காணொளிகளைத் தயாரிக்கும் Ms Rachel கூறினார். பெற்றோர் மீது நம்பிக்கை இருக்கும்போதுதான் பிள்ளைகள் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த நம்பிக்கையைப் பெற்றோர் இழந்துவிடக்கூடாது என்றும் அவர் சொன்னார். […]

ரஷ்யாவுக்கு ஆயுதங்களைத் தருமாறு கிம்ஜாங்கிடம் புதின் கோரிக்கை

வடகொரிய அதிபர் கிம் ஜாங் இம்மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடகொரிய அதிபர் கிம் , ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டு விளாதிவோஸ்டாக் என்ற பசிபிக் கடலோர நகரில் புதினை சந்திக்க உள்ளார். இதன்போது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களைத் தருமாறு கிம்ஜாங்கிடம் புதின் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஷய – உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என்கிற அச்சம் […]

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி ஜோபிடனுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது. அவரது மனைவி ஜில் பிடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும், ஜி-20 மாநாட்டின் அட்டவணையின்படி ஜனாதிபதி ஜோ பிடன் இந்தியா செல்வார் என கூறப்படுகின்றது. அத்துடன் திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வரும் 7ஆம் திகதி பிடன் இந்தியா செல்லவுள்ளதுடன் செப்டம்பர் 8 ஆம் திகதி புதுடெல்லியில் […]

இந்தியாவின் பெயர் பாரத் என மாறுகிறதா? G20 அழைப்பிதழில் ” பாரத் ஜனாதிபதி” என குறிப்பு!

எதிர்வரும் செப்.,18 முதல் 22 வரை நடைபெற உள்ள இந்திய பாரளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை உருவாக்கினார். ஒரு நாட்டின் பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பா.ஜ., கட்சி மற்றும் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், இந்தியா என்ற நாட்டின் பெயரை ‘பாரத்’ […]

இஸ்ரோவின் பேச்சாளர் மாரடைப்பால் காலமானார்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் பேச்சாளர் வளர்மதி மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (04.09.2023) உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய உந்துகணை நிகழ்வுகளின் போது வளர்மதி வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் பலராலும் பாராட்டுப்பெற்ற ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதியின் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஜூலை 30 இல் சிங்கப்பூர் […]

பல்லடத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட நான்கு பேரின் சடலங்களை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு!

திருப்பூர் பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் சடலங்களை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். முதலில் உடல்களை பெற ஒப்புதல் தெரிவித்த உறவினர்கள், தற்போது மறுப்பு தெரிவித்துள்ளனர். உடல்களை வாங்க வேண்டாம் என உறவினர்களிடம் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர். BJP members and villagers of Kallakinaru to which the 4 murder victims of a family belonged stage a road blockade in front of #Palladam Government Hospital in […]

சீன அதிபர் ஜின்பிங் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்க்க திட்டம்

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிரவும், பிற நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் சீன அதிபர் […]

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கி.மீ. தொலைவில் இன்று காலை 7.08 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால் ……………….?

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிராக அவரது கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கிஹாலே, விவேக் ராமசாமி உள்பட பலரும் களம் இறங்கி உள்ளனர். அவர்கள் குடியரசு கட்சியினரிடம் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு […]

மது குடித்ததை தட்டிக்கேட்டதால் – 4 பேர் கொலை

செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்ததால் சரக்கு வேன் ஒன்றை வைத்திருந்தார். அந்த சரக்கு வேனுக்கு டிரைவராக ஒருவர் வேலை செய்துள்ளார். அந்த டிரைவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்தினார். ஆனால் அந்த டிரைவர் வேலையை விட்டு நின்ற பிறகும் செந்தில்குமார் வீட்டிற்கு வரும் வழிப்பாதையில் அமர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது செந்தில்குமார் அவரை எச்சரித்து வேறு பகுதிக்கு சென்று மது அருந்துமாறு பலமுறை கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த டிரைவரும், […]