இங்கிலாந்தில் இளநிலை டாக்டர்கள் போராட்டத்தில் …..

இங்கிலாந்தில் உள்ள இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில்வே, விமான போக்குவரத்து உள்பட பல்வேறு துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும்போது பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.    

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.85 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 88.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை, வீழ்ச்சியை பதிவு செய்து 2.67 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

அமெரிக்காவில் பொலிஸாரின் கடுமையான நடவடிக்கை…….

அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் திருட்டியில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டகர்ப்பிணி பெண்ணை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டத்தில அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. ஓஹியோ வெஸ்டர்வில்லில் உள்ள க்ரோகர் வணிக வளாகத்தில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட தாகியா யங் என்ற கர்ப்பிணி பெண் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது பிளெண்டன் டவுன்ஷிப் பொலிஸ் அதிகாரிகள் காரில் சாரதி இருக்கையில் அமர்ந்து இருந்த கர்ப்பிணியான தாகியா யங்-கை நெருங்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதில், தாகியா […]

ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் கைது

பொய்யான தகவல்களை வழங்கி, மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி, கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஊடாக […]

” இன்பநிதி பாசறை” புதுகோட்டையில் போஸ்டர் ! ஒட்டியவர்களுக்கு ஆப்பு வைத்த மினிஸ்டர் !

கலைஞர் கருனாநிதியின் குடும்பத்தின் புதிய அரசியல் அறிமுகமாக இன்பநிதி வரப்போகிறார் என்பது ஒன்றும் பெரிய செய்தியல்ல. ஆனாலும் இவ்வளவு வேகமாக வருகிறார் என்றதும் பலருக்கு அதிர்ச்சி . புதுகோட்டை தி.மு.க நிர்வாகிகள்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகனான இன்பநிதி அவர்களின் பெயரில் பாசறை அமைதது எதிர்வரும்  24 ஆம் திகதி நலன்திட்டங்களை ஆரம்பிக்கிறார் என தெரிவித்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். இதனை அடுத்து போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் […]

சுவீடனில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழா

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான போர் மற்றும் சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய ரஷியா எதிர்ப்பது ஆகியவை காரணமாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா-பெலாரஸ் மற்றும் […]

ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை, வகுப்புகள் தொடங்கியது*

  ஆகஸ்ட் 28, 2023 திங்கட்கிழமை முதல், வட அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், தமிழ் வகுப்புகள் முறையாக தொடங்கியது. ஐ.சி.சி.ஆர் மூலமாக முனைவர் த.விஜயலக்ஷ்மி அவர்கள் இந்தியாவிலிருந்து வருகை புரிந்துள்ளார். தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் மூலம் பத்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ் இருக்கை தலைவர் திரு. சாம் சொக்கலிங்கம் கண்ணப்பன் வரவேற்பு தெரிவித்தார். இந்திய தூதரக அதிகாரி திரு. மஞ்சுநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் இந்திய கலாச்சாரம் […]

இஸ்ரேயில் எரித்திரிய அகதிகளுக்கிடையே மோதல் 100 பேர் காயம்! அமைதியை நிலைநாட்ட படையினர் துப்பாக்கி சூடு

இஸ்ரேயல் நாட்டில் அகதி தஞ்சம் கோரிய எரித்திரியர்கள் இன்றைய தினம்  எரித்திரிய ஆளும் அரசிற்கு ஆதரவானர்கள் எரித்திரிய தினத்தை கொண்டாடிய போது  ஜனாதிபதி இஜயாஸ் ஹப்வர்க்ககியின் எதிர்ப்பு வாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டெல் அவிவ்வில் இடம்பெற்ற இந்த மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு படை துப்பாக்கியால் புகை குண்டுகளை பிரயோகம் செய்தனர். Eritrean "asylum seekers" fight each other in Tel Aviv, Israel. They are […]

ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகள்

நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம், புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் […]

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் நபர்களை சிறப்பு புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர். பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகளை சிறப்பு புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். தோடா மாவட்டம் காட் கிராமத்தைச் சேர்ந்த பிர்தாஸ் அகமது வானி, […]