இஸ்ரேல் நாட்டில் கட்டுமான தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை

இஸ்ரேல் நாட்டில் கட்டுமான தொழிலுக்கு தேவையான ஆட்கள் உள்ளூரில் பற்றாக்குறையாக காணப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில் தெரிந்த தொழிலாளிகளை வேலைக்கு சேர்த்து கொள்கிறது. இதன்படி, இஸ்ரேல் நாட்டின் கட்டுமான தொழிலுக்கு தேவையான ஆட்களை கொண்டு வருவதற்காக சீன கட்டுமான கூட்டமைப்புடன் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது. இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடியுரிமை கழகம் சார்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 3 ஆயிரம் கூடுதல் தொழிலாளர்களை சீனாவில் இருந்து இஸ்ரேலுக்கு கொண்டு வர முடிவானது. இஸ்ரேலில், […]

சிலி நாட்டில் பயணிகள் ரயில் மீது மோதிய மினி பேருந்து – 6 பேர் பலி

சிலி நாட்டில் மினி பேருந்து மீது பயணிகள் ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தைக் கடந்து சென்ற அந்த பேருந்தில் 14 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்து பாதி தூரம் சென்ற போது மின்னல் வேகத்தில் வந்த பயணிகள் ரயில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 5பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக சிலி பொலிஸார் […]

சிறுமி சாரா கொலை வழக்கு தொடர்பில் தற்போது பாகிஸ்தானில் விசாரணை

பிரித்தானியாவில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல்போனதாக கூறப்படும் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை ஐந்து நாட்களுக்கு பின்னர் தான் பொலிஸார் தேடத் தொடங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சாரா ஷெரீப் என்ற சிறுமியின் கொலை வழக்கில் தற்போது காணாமல்போன மூவருக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நபர்கள் ஆயுள் முழுவதும் ஒளிந்திருக்க முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர். சிறுமி சாரா கொலை வழக்கு தொடர்பில் தற்போது பாகிஸ்தானில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் […]

சிங்கப்பூர் ஜனாதிபதி இலங்கை தமிழரா? இந்திய தமிழரா? ஊடகங்களின் குடுமி சண்டை!

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள பதில் பிரதமர் தர்மன் சண்முகரட்ணம் இலங்கை தமிழரா? இந்திய தமிழரா என்ற சர்ச்சை சமூக ஊடகங்களின் இன்றைய  வைரல் செய்தி குறிப்பாக தமிழக ஊடகங்கள் அவரை இந்திய தமிழராக அடையாளம் காட்டிய போதிலும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரமுகர்கள்  இலங்கையின்  வடக்கை மையமாக கொண்ட ஊடகவியலாளர்கள் அவரை இலங்கை தமிழர் என்றே அடித்து சொல்கிறார்கள். உதாரணமாக இளம் ஊடகவியலாளரான பார்த்தீபன் சண்முகநாதன் தனது டூவிட்டரில் தர்மன் சண்முகரட்ணம் இந்திய […]

சிங்கபூரின் 9 வது ஜனாதியாக இலங்கைத்தமிழ் வம்சத்தை சேர்ந்த தர்மன் தெரிவு!

சிங்கப்பூரின் 9 வது ஜனாதிபதியாக இலங்கைத்தமிழ் வம்சத்தவரான தர்மன் சண்முகரத்தினம் தெரிவி செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் ,துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தாய் மற்றும் பேரனார் யாழ்ப்பாண ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் […]

சீமானை விசாரணைக்கு அழைத்துள்ள பொலிஸ்! ஆதரவாளர்கள் ஆவேசம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விசாரணைக்காக வருமாறு ஈரோடு கருங்கல்பாளையம் பொலிஸார் அழைப்பானை   அனுப்பியுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து கடந்த மார்ச் 13 ஆம் தேதி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், அருந்ததியினர் சமூகம் குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக கருங்கல்பாளையம் பொலிஸ்  நிலையத்தில் அளிக்கப்பட புகாரின் பேரில்  சீமான் மீது கடந்த […]

பயணிகள் தொழுகை செய்ய பஸ்ஸை நிறுத்தியதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட நடத்துனர் தற்கொலை !

பஸ்  பயணத்தின் நடுவே சில பயணிகள் தொழுகை நடத்துவதற்கு வசதியாக, பஸ்ஸை சில நிமிடங்கள் நிறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நடத்துநரின் தொழில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டார் அதன் எதிரொலியாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பரேலிக்கு உட்பட்ட ஒரு பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றில் மோஹித் யாதவ் என்ற வாலிபர் ஒப்பந்த அடிப்படையில் […]

ஜனாதிபதி மாளிகைக்கு  பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

உலகில் மிக அதிகார மிக்க அமைப்புகளில் ஒன்று ஜி20. இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், டெல்லி அரசும், மத்திய அரசும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி மாளிகைக்கு […]

ஜப்பானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கு கடுமையான எதிர்ப்பு

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவுநீரானது பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடுகளான சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே ஜப்பானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதித்து சீனா உத்தரவிட்டது. இதனால் கடல்வகை உணவுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது 90 சதவீதம் குறைந்தது. இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் […]

பிரதமர் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் மாற்றம்

இங்கிலாந்தின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பென் வாலேஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான (Energy Security and Net Zero) செயலாளராக இருந்த கிராண்ட் சாப்ஸ் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து பிரதமர் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கிளேர் கோடின்ஹோ(38), தற்போது இங்கிலாந்தின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷியா-உக்ரைன் போர் […]