பிரதமர் மோடி பற்றிய உளகளாவிய பார்வை

அமெரிக்காவை சேர்ந்த ‘பியு ரிசர்ச் சென்டர்’ என்ற அமைப்பு ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இந்தியா உள்பட 24 நாடுகளில் 30 ஆயிரத்து 861 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 20-ந் தேதி முதல் மே 22-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. பிரதமர் மோடி பற்றிய உளகளாவிய பார்வை, இந்தியா உலக வல்லரசு ஆவதற்கான வாய்ப்பு, இதர நாடுகளை பற்றிய இந்தியர்களின் கருத்துகள் ஆகியவை கருத்து கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது […]

“பாதுகாப்பான பாதையை தேடி ரோவர்…….

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. அதில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவில் சல்பர் உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் நிலவில் சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரை, விக்ரம் லேண்டர் குழந்தையை போல் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. […]

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்

செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் தான் முடிந்த நிலையில் தற்போது சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி […]

தென்ஆப்பிரிக்காவில் ஐந்து மாடி கட்டிடத்தில் தீ விபத்து

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் 43 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இன்று […]

“தினமலர்” பத்திரிகை தலைப்பால் தின’மலமா’கிய நிலை! முதல்வர் கடும் கண்டனம்!

தினமலர் பத்திரிகையில் “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு , கக்கூஸ் நிரம்பி வழிகிறது ” என்ற தலைப்பை பத்திரிகையின் தலைப்பு செய்தியாக வெளியிட்டதை அண்ணாச்சி செய்தி சேவை வன்மையாக கண்டிக்கிறது. ஊடக அறத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் ஊடக மாப்பியாக்களாக செயற்பட கூடாது . தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு பாடசாலை நடுநிலை மாணவர்களுக்கான சத்து உணவு திட்டத்தை அமுல் படுத்தியது. இதனை பலர வரவேற்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வெளிவரும் பழம்பெரூம் பத்திரிகையான தினமலர் தமது தலைப்பில் “மாணவர்களுக்கு […]

உகாண்டாவில் 200 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் அதிபர் யோவேரி முசெவெனி மனிதாபிமான அடிப்படையில் 200 சிறை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்க உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து நாட்டின் சிறை கைதிகள் நல அதிகாரி ஒருவர் கூறியதாவது, நாட்டில் உள்ள சிறைகளில் 72 ஆயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் உடல் நலக்கோளாறு உடைய கைதிகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் கைதிகளை தேர்ந்தெடுந்து மன்னிப்பு வழங்க அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அதிபரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி 1800 […]

பிட்னஸ் பெண் 33 வயதில் திடீர் மரணம்

சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒரு சிலரின் வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒவ்வொரு போஸ்டையும் பார்த்து தங்களது கருத்துகளை வெளியிடுவார்கள். ஆன்மிகம், மருத்துவம், அழகு குறிப்பு, பிட்னஸ் என எல்லா துறைகளிலும் இதுபோன்று வீடியோக்கள் வெளியிடுபவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் (Influencer) என அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் பிட்னஸ், […]

நாகூர் பட்டினச்சேரியில் மீனவர்கள் இடையே மோதல்!

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் இடம்பெற்று வருகிறது.  அத்துடன்நாகை – நாகூர் சாலையை மறித்து போராட்டம் நடைப்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கற்கள், கட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொகொண்டதால் பலர காயமடைந்துள்ளனர் பொலிஸார் மோதலை தடுக்கும் வகையில் கலககாரர்களை  கைது செய்து வருகின்றனர் முழு விபரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேல பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி […]

BJP தமிழ்நாடு இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜெகன் வெட்டி கொலை! சந்தேகநபர் பிரபு தப்பியோட்டம்!

திருநெல்வேலி பா.ஜ., இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகன் பாண்டியன்  நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மூளிகுளத்தை சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன்  வயது 34. திருமணமாகவில்லை நேற்றிரவு மூளிக்குளம் பாலம் அருகே இவரை நோக்கி வந்த கும்பலொன்று சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர். இதனால் அந்த பகுதியே பதற்றமடைந்ததுள்ளது.கோயில் கொடை தொடர்பான பகையே கொலைக்கு காரணம் என பொலிஸார் கூறுகிறார்கள். அண்ணமாலை அறிக்கை திருநெல்வேலி வடக்கு மாவட்ட பிஜேபி தமிழ்நாடு இளைஞரணி பொதுச் செயலாளர், சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்கள், […]

அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் மரணங்கள்

அமெரிக்காவில் இளைஞர்கள் புதுவகை போதை பொருளுக்கு அடிமையாகி அதிக அளவு மரணங்கள் நடந்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் தரவுகளின்படி போதை பொருளை அளவுக்கு மீறி உட்கொள்வதால் நிகழும் மரணங்கள் அமெரிக்காவில் 5 நிமிடத்திற்கு 1 எனும் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் வல்லரசு நாடான உள்ள அமெரிக்காவில் போதை பொருள் பழக்கம் பரவலாக இருந்து வரும் ஒன்றுதான். எனினும் தற்போது மிகப்பெரும் சமூக பிரச்சினையாக போதை பொருள் பழக்கம் மாறியிருக்கிறது. இந்நிலையில் […]