அவுஸ்திரேலியாவில் சர்வஜனவாக்கெடுப்பு

அவுஸ்திரேலிய பிரதமரின் சர்வஜனவாக்கெடுப்பு அவுஸ்திரேலியாவில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 14ம் திகதி பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள பிரதமர் அன்டனி அல்பெனிஸ், அவுஸ்திரேலிய மக்களை ஒன்றிணைப்பதற்கான சிறந்ததாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் இதுவெனவும் தெரிவித்துள்ளார். சர்வஜனவாக்கெடுப்பில் மக்கள் பூர்வீக குடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தால் பூர்வீக இன மக்கள் அரசமைப்பினால் அங்கீகரிக்கப்படுவார்கள் . அதுமட்டுமல்லாது சட்டங்கள் குறித்து […]

தொடருகிறது இம்ரான் கானின் சிறைதண்டனை

பாகிஸ்தானின் நாட்டில்  ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. தோஷகானா வழக்கு என்று அழைக்கப்படும் இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட செசன்சு கோர்ட்டு இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 5-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தீர்ப்பை தொடர்ந்து, இம்ரான்கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தோஷகானா வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட […]

காபோன் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காபோன். இந்நாட்டின் அதிபராக பங்கொ ஒடிம்பா (வயது 64). இவரது தந்தை ஒமர் பங்கொ 1967ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காபோன் நாட்டின் அதிபராக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் அவரது மகனான பங்கொ ஒடிம்பா 2009ம் ஆண்டு முதல் அதிபராக செயல்பட்டு வந்தார். இதனிடையே, காபோன் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பங்கொ ஒடிம்பா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3வது முறையாக […]

பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம்

கர்நாடகத்தில் நாங்கள் செய்த பணிகள் இந்தியா முழுவதும் பிரதிபலிக்கப்படும் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது . பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா , துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்றுள்ளனர் . இந்த […]

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்களும் சென்னை திரும்பினர்!

சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களும் விடுதலையாகி  சென்னை திரும்பியுள்ளனர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த, 10 மீனவர்களை கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்திய மத்திய,  தமிழ்நாடு மாநில அரசுகளின் நடவடிக்கையால், 10 மீனவர்களும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். நேற்று காலை  கட்டுநாயக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் 10 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி […]

போதைப்பொருள் கடத்தல் – “குணா” உட்பட 13 இலங்கையர்களும் நடிகை வரலட்சுமியின் உதவியாளரும் கைது! போதைப்பணம் சினிமாவில் முதலீடா?

போதைப்பொருள், ஆயுதக்கடத்தில் வழக்கில் நேரில் ஆஜராகும்படி  நடிகை வரலட்சுமிக்கு லனாய்வு ஏஜென்சி  வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆயினும் தமக்கு அவ்வாறான சம்மன் எதுவும் வரவில்லை என வரலட்சுமி சரத்குமார் அறிக்கை மூலமாக அறிவித்துள்ளார். போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் உதவியாளரான ஆதிலிங்கம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆதிலிங்கம் குறித்த தகவல்களை பெற நடிகை வரலட்சுமிக்கு, நேரில் ஆஜராக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது […]

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் சசிகலா வருவாரா? நீதிமன்றம் இன்று விசாரணை!

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே பல வழக்குகள் நடைபெற்று ஒருவழியாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை உறுதி செய்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதனை கொண்டாடும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கோதாவுடன் அண்மையில் மதுரையில் மிக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.   ஆனால் மதுரை மாநாடு மூலம் பெற்ற […]

பாரிஸ் ஸ்ரீ கணேஷ் ஆலய வருடடாந்த தேர் திருவிழா!

பாரிசில் இருந்து – ஊடகவியலாளர் – இருளப்பன் ஜெகநாதன் ஸ்ரீ கணேஷ் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 27 ஆம் திகதி வெகு விமரிஷியாக நடைபெற்றது. ஆகஸ்ட் 27, 2023 அன்று பாரிஸ் லா சப்பல் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா ஊர்வலம் காலை 10:30 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. ஐரோப்பாவிலேயே அதிகமான பக்தர்கள் வருகை தரும் ஒரு திருவிழாவாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. மயில் ஆட்டம் , சிலம்பு […]

இம்ரானுக்கு பிணை! ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அஸ்ரப் அலீ பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அத்துடன் அவருக்கு பிணை வழங்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவருக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த வருட இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இம்ரான் கானுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது முன்னதாக அவருக்கு ஐந்து வருடங்கள் அரசியலில் ஈடுபடத் தடை […]

பாலி கடல் பகுதியில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிமீ (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக ஆழமாகவும் இருந்தது என்று EMSC தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த […]