அமெரிக்காவில் துப்பாக்கி சூடு பேராசிரியர் பலி

அமெரிக்காவில் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பேராசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பேராசிரியர் பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்தின் […]

சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிட்ட – பிரதமர் மோடி

சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. பிரதமர் மோடி இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளை நேரில் சென்று பாராட்டினார். இந்தநிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று மதியம் திருவனந்தபுரம் வெங்கானூர் பவுர்ணமிக்காவு தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சந்திரயான்-3 வெற்றிக்கு அனைத்து விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே காரணம். இதற்காக கடந்த […]

ஒன்றாரியோவில் ஹோட்டல் உரிமையாளர் அடித்துக் கொலை

ஒன்றாரியோவில் ஹோட்டல் பில்லை செலுத்துமாறு கோரிய உரிமையாளர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஒன்றாரியோவின் ஓவன் சவுன்ட் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். 44 வயதான சாரிபுர் ரஹ்மான் என்ற நபரை, சில வாடிக்கையாளர்கள் தாக்கிக் கொன்றுள்ளனர். உட்கொண்ட உணவிற்கான பில்லை செலுத்துமாறு மூன்று பேரிடம் ரஹ்மான் கோரியுள்ளார். எனினும், இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மரணத்தில் முடிந்துள்ளது. கடந்த 17ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் மர்மமான முறையில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்கா – ஒகையோவில் உள்ள வீட்டில் 3 குழந்தைகள் உட்பட 5 குடும்ப உறுப்பினர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர். யூனியன்டவுன் பொலிஸார் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 46 வயதான ஜேசன், 42 வயதான மெலிசா மற்றும் இவர்களது குழந்தைகள் 15 வயதான ரெனி,12 வயதான ஆம்பர் மற்றும் 9 வயது இவான் 15 மைல் தொலைவில் உள்ள லேக் டவுன்ஷிப்பில் உள்ள அவர்களது […]

பிரான்ஸ் நாட்டில் மதத்தை வெளிப்படுத்தும் வகையிலான அடையாளங்களுக்கு தடை

பிரான்ஸ் நாட்டில் அரசுப்பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் மதத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகள், அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தலைப்பகுதியை மூடும் உடையான ஹெட்ஸ்கர்ப் உடைக்கு 2004ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலை முதல் கால் வரை உடல் முழுவதும் மூடும் இஸ்லாமிய உடையை பொது இடங்களில் அணிய 2010ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், பிரான்ஸ் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணியவும் தடை […]

ஜிம்பாப்வேயில் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபரானார் எம்மர்சன்

ஜிம்பாப்வேயில் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபரானார் எம்மர்சன் ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நாளில் நடைபெற வேண்டிய தேர்தல் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 24-ந்தேதி வரை நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வாவுக்கும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்பான இந்த தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் எம்மர்சன் 52.6 சதவீதம் […]

சந்திரயான் திட்டத்தை கேலி செய்த சீனா

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர், கடந்த 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்டு இன்றும் நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து உள்ளது. சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள நவீன கேமரா எடுத்து அனுப்பிய இந்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டு இருந்தது. இதுவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. நிலவின் மேற்பரப்பில் ரோவரின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள், அது 8 மீட்டர் அளவுக்கு நகர்ந்திருப்பததாக கூறியுள்ளனர். மிகக்குறைந்த செலவில் செயல்படுத்தப்பட்ட இந்தியாவின் […]

பிரான்ஸ் தூதர் சில்வெயின் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

நைஜரில் கடந்த மாதம் ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி புதிய அதிபராக பதவியேற்றார். ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது. இதற்கு […]

ஆகஸ்டு 23 தேசிய விண்வெளி தினம் – பிரதமர் மோடி

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பியதும் நேராக இஸ்ரோ […]

மடகாஸ்கரில் விளையாட்டு விழா நெரிசலில் 13 பேர் பலி

மடகாஸ்கரில் விளையாட்டு விழாவின் தொடக்கத்தில் ஏற்பட்ட நெரிசலில் 13 பேர் இறந்ததாகவும் 108 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் அன்டனானரிவோவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஏறக்குறைய 50,000 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நிகழ்வில் கலந்து கொண்ட செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தியப் பெருங்கடல் தீவுகள் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.