சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான அலைச்சறுக்கு வீரர்

அவுஸ்திரேலியாவில் சுறாமீன் தாக்கியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான அலைச்சறுக்கு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸ் கடற்கரைக்கு அருகில் உலாவலில் ஈடுபட்டிருந்த 44 வயது நபர் சுறாவால் தாக்கப்பட்டுள்ளார். நபர் சுமார் 30 வினாடிகள் சுறா மீனிடம் இருந்து தப்பிக்க போராடியதாகவும், காயங்கள் காரணமாக அவர் சிரமத்துடன் கரைக்கு நீந்தியதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில […]

அமெரிக்காவில் தாயை காப்பாற்றிய மகள் உயிரிழந்த சம்பவம் …

தாயின் இரண்டாவது கணவரிடம் இருந்து தாயை காபாற்றிவிட்டு 21 வயது மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான் எனும் யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 21 வயதான ஏஞ்சலினா டிரான், தனது தாயுடனும் தாயின் இரண்டாம் கணவர் கியெப் கெய்ன் சவ் ஆகியோருடன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பீகான் ஹில் பகுதியில் வசித்து வந்தார். கியெப், கடந்த வருடம் வரை […]

மதுரை ரயிலில் பெரும் தீ விபத்து – 8 பேர் பலி 20 பேர் காயம் 

    மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். ரயிலின் ஒரு பெட்டியல் ஏற்பட்ட தீ தொடர்ந்து மற்ற பெட்டியிலும் பரவியதாக சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17-ம் தேதி தமிழகம் வந்துள்ளனர். ரயிலில் தீ […]

சந்திரயான் 3-ன் ரோவர் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்ட – இஸ்ரோ

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3-ன் ரோவர் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. சந்திரயான் 3-ன் லேண்டரில் இருந்து ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் காட்சியை வெளியிட்டுள்ளது. லேண்டர் திறந்து சாய்வுபலகை வழியே ரோவர் இறங்கி செல்லும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டது.        

பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதில் தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா கோர்ட்டில் […]

ஏதென்ஸ் அருகே பரவி வரும் வனத்தீ

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் வனத்தீயை அணைக்க விமான படையினர் போராடி வருகின்றனர். ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள பர்னிதா மலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 65 வாகனங்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர்களுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுத்தீ தலைநகரை தொடர்ந்து மெனிடி நகருக்கும் பரவியுள்ளது. அங்கு 3 முதியோர் இல்லங்களில் இருந்து 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று […]

நேபாள சாலை விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்களின் உடல் சொந்த ஊருக்கு

நேபாளத்தின் பாரா மாவட்டத்தல் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பஸ், இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்றபோது, பாராவில் உள்ள சூரியாமை அருகே விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பேர் பஸ்சில் இருந்தனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை […]

நம்பமுடியாத சாதனை சந்திரயான் 3 -கமலா ஹாரிஸ்

நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமலா துணை ஜனாதிபதி ஹாரிஸ் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும் என்றும் விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் விமான விபத்து, வாக்னர் கூலிப்படைத் தலைவர் உயிரிழப்பு?

அஸ்ரப் அலீ ரஷ்யாவில் இன்று மாலை இடம்பெற்ற விமான விபத்தில் வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜினி பிரிகோசின் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிப் பறந்து கொண்டிருந்த சிறிய ரக தனியார் விமானம் ஒன்றே டீவர் பிராந்தியத்தின் (Tver Region) குசென்கினோ கிராமம் ( Kuzhenkino) அருகே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது விமானத்தில் ஏழுபேர் பயணித்துள்ளனர். பயணிகள் பெயர்ப்பட்டியலில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் ப்ரிகோசின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. BREAKING: Private jet carrying […]

சந்திரயான் 3 : நிலவின் தென்துருவத்தின் பக்கம் யாருமே சென்றதே இல்லை.! இந்தியாவிற்கே பெருமை

நிலவில் எட்ட முடியாத இலக்காக நீண்டகாலமாக இருந்து வரும் தென்துருவத்தில் இன்று சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறங்கி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் நிலவின் தென்துருவத்தை பார்த்து உலக நாடுகள் அஞ்சும் நடுங்கும் நிலையில் இந்தியா ரிஸ்க் எடுத்து சாதித்தது ஏன்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் […]