மிசோரமில் பால விபத்து வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி

மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது, 35-40 தொழிலாளர்கள் இருந்ததால், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, இடிந்து […]

நேபாளத்தில் – ஆற்றில் கவிழ்ந்த பஸ் 8 பேர் பலி

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங் மாவட்டத்தில் கஜுரி பகுதியருகே சென்றபோது பஸ் அருகேயுள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து […]

அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை

அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுதீயை எதிர்கொள்ளதயாராகவேண்டும் என எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2019 – 20 கறுப்புகோடை கால காட்டுதீயின் பின்னர் மிகவும் ஆபத்தான காட்டுதீயை எதிர்கொள்வதற்கு அவுஸ்திரேலிய மக்கள் தயாராகவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழமைக்கு மாறான வெப்பநிலைகாரணமாக அவுஸ்திரேலியாவின் பெருமளவு பகுதிகள் காட்டுதீயினால் பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகின்றதாக அவுஸ்திரலேசிய தீ அதிகாரபேரவை தெரிவித்துள்ளது. குறைவடைந்துள்ள மழைவீழ்ச்சி காலநிலை மாற்றங்கள் போன்றவையும் இவற்றுக்கு காரணம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குயின்ஸ்லாந்து நியுசவுத்வேல்ஸ் […]

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! கண்டித்து போராட்டம்!!

  நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டம் செய்து வருவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன. கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை தாக்கி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசலை கொள்ளையடித்துச் சென்றனர் வேதாரண்யம் மீனவர்கள் ஏற்கனவே நேற்று மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தமிழக […]

மத்திய துருக்கியில் பஸ் விபத்து 11 பயணிகள் பலி

மத்திய துருக்கி நகரமான யோஸ்காட் பகுதியில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. யோஸ்காட் பிரதான சாலையில் சிவாஸ் நகரில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையிலிருந்து விலகி சாலையோர பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. மத்திய துருக்கி நகரமான யோஸ்காட் பகுதியில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. யோஸ்காட் பிரதான சாலையில் சிவாஸ் நகரில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் […]

பிரித்தானியாவில் 7 குழந்தைகளை கொன்ற நர்சு – நீதிமன்றம் விடுத்த அதிரடி தீர்ப்பு

பிரித்தானியாவில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக இறப்பு, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. பொலிஸார் நடத்திய விசாரணையில் அந்த மருத்துவமனையில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் உயிரிழப்பு அதிகரித்த சம்பவங்களின்போது பணியாற்றியது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்தது. பொலிஸார் […]

ரஸ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்த -உக்ரைன்

உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் ரஸ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளன. அந்தவகையிஒல் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை உறுதி செய்ய முடிவதாக பிபிசி தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் விமானமொன்று சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ தெரிவித்துள்ளது. டு 22 விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது உக்ரைன் நகரங்களை தாக்குவதற்கு ரஸ்யா இவற்றை பயன்படுத்தியுள்ளது. இதேவேளை ஆளில்லா விமானதாக்குதல் சனிக்கிழமை […]

அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு பேரழிவு எச்சரிக்கை

அமெரிக்காவில் 84 ஆண்டுகளின் பின்னர் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய முதல் வெப்பமண்டல சூறாவளி, அம்மாநிலத்தில் வெள்ள பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹிலாரி சூறாவளி என பெயரிடப்பட்ட குறித்த புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில், நேற்று மெக்சிகோவில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து கரையை கடந்தது. மேலும், சூறாவளியால் மெக்சிகோவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக […]

நிகழ்ச்சி மேடையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஷகினி நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது, நிகழ்ச்சி மேடையில் அமர்ந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் திடீரென ஷகினி மீது தாக்குதல் நடத்தினார். இந்த கத்தி தாக்குதலில் ஷகினியின் கையில் படுகாயம் ஏற்பட்டது. […]

நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கிய ரோஸ்கோஸ்மோஸ்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதில் இந்தியா, ரஷியா இடையே போட்டி நிலவுகிறது. அந்த […]