சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் மாயம்

சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிர்ழந்தனர். மேலும் 16 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.  

எலான் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர் இல்லை

கடந்த மாதம் முதல் ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டுவிட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையே சிறிய உரசல் இருந்து வருகிறது. ஏனெனில், கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி மார்க் ஜூக்கர்பெர்க் ‘திரெட்ஸ்’ என்ற செயலியை டுவிட்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்தார். தற்போது இருவரும் வெவ்வேறு கருத்துகளை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து மார்க் ஜூக்கர்பெர்க் தனது திரெட்ஸ் பக்கத்தில், “எலான் எதையும் தீவிரமாக […]

அமெரிக்காவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ ஐவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 10 வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தீவிபத்து ஏற்பட்ட வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ வேகமாகப் பரவி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளால், சுற்றியுள்ள 9 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்களும், கதவுகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் காயமடைந்த […]

பிரித்தானியாவில் 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டம்

பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால் பிரித்தானியாவில் அதன் பாதிப்பு அதிகமானது. அதன் ஒருபகுதியாக வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு பணவீக்கம் தாறுமாறாக எகிறியது. இதனால் பிரித்தானியாவி; ரயில்வே, விமான நிலையம், தபால் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் […]

ஈபிள் டவரில் வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்

பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலக சுற்றுலா தலங்களில் மிகவும் சிறந்ததாக விளங்கி வருகின்றது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர் உள்ளது. இவ்வாறான நிலையில், ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக இனறைய தினம் (12-08-2023) மிரட்டல் […]

இன்ஸ்டா நேரலையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம்

ஐரோப்பிய நாடான போஸ்னியா-ஹெர்ச்கோவினாவில் இன்ஸ்டா நேரலையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுளது. ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நாடு போஸ்னியா-ஹெர்ச்கோவினா. இதன் வடகிழக்கில் உள்ளது க்ரடகாக் (Gradacac) நகரத்தில் நெர்மின் சுலெமனோவிக் (Nermin Sulejmanovic) எனும் ஒரு உடற்பயிற்சியாளர் வசித்து வருகின்றார். இவர் மீது போதை பொருள் கடத்தல் மற்றும் காவல்துறை அதிகாரியை தாக்கியது என பல வழக்குகள் உள்ளன. நேற்று காலை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள தனது கணக்கில், நெர்மின் “இன்று ஒரு கொலையை […]

அண்ணாமலையின் நடைபயணம் வெறும் விளம்பரம் – நடிகர் எஸ்.வி.சேகர்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த பயனும் இல்லை என நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- “தனக்கு வேண்டிய சில நபர்களை வைத்துக் கொண்டு அண்ணாமலை நடத்தும் நடைபயணத்தால் எந்த பயனும் இல்லை. அவருக்கு வேண்டுமானால் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் வரலாம். தேர்தலில் ஒரு வாக்காவது வாங்கிக் கொடுப்பதற்காக முயற்சி செய்தால் தான் அது […]

சீனாவில் நிலவும் மோசமான வானிலை -16 பேர் பலி

சீனாவின் சியான் நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் சீனாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்றும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹவாய் காட்டு தீ – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹவாய் காட்டுதீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர். ஹவாயில் காட்டுதீயினால் முற்றாக அழிவடைந்துபோன லகையினாவின் மக்கள் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கின்ற நிலையில் இழப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் காணாத அழிவுகளை காணவேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். கடந்தவார தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த […]

இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய […]