பணம் பல எதிர்மறை குணங்களுடன் வருகிறது – மலேசிய தொழில் அதிபர் மகள்

மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங் (78) மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் ஆகியோரின் ஒரே மகள் ஏஞ்சலினா. கூ கே பெங், மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆவார். இது உயர்தர சொகுசு பிராண்டுகள் மற்றும் ஓட்டல்களில் பெரும் பங்குகளைக் கொண்ட முதலீட்டு நிறுவனமாகும். கூ கே பெங் 2015 ஆம் ஆண்டில், போர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44 வது இடத்தைப் பிடித்தார். அவரது சொத்தின் நிகர மதிப்பு […]

நிலவை ஆராய்வதற்காக “லூனா-25”

விண்வெளி ஆராய்ச்சியின் முன்னனியில் உள்ள நாடான ரஷியா, நிலவை ஆராய்வதற்காக “லூனா-25” என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது. இந்தநிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு விண்கலத்தை இன்று ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது. 5 நாட்கள் பயணம் […]

சுவிட்சர்லாந்து கைக்கடிகாரம் மூலம் ஓரின சேர்க்கை ஊக்குவிப்பு – மலேசியா குற்றச்சாட்டு

மலேசியாவில் ஓரின சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனம் தங்களின் தயாரிப்புகள் மூலமாக மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஊக்குவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மலேசியாவில் உள்ள சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை […]

ஹவாய் தீவில் தீ விபத்து

அமெரிக்காவின் ஹவாய் தீவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக ஆயிரத்து 700க்கும் அதிகமான கட்டடங்கள் நெருப்பில் எரிந்த நாசமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று நகரமான லஹைனா 80 விழுக்காடு அழிந்துவிட்டதாக ஹவாய் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி36 ஆக இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சிகிச்சை […]

துருக்கியில் பதிவாகிய நிலநடுக்கம்

துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் மையம் இந் நிலநடுக்கம் 5.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணம் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களாகும். நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

தனது வழக்கறிஞரிடம் மன்றாடிய இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு தனது வழக்கறிஞரிடம் இம்ரான் கான் மன்றாடி வருகிறார். அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் தனது வழக்கறிஞரிடம் தன்னை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவது குறித்து பேசி உள்ளார். சந்திப்புக்குப் பிறகு வழக்கறிஞர் ஹைதர் கூறியதாவது:- சிறைக்குள் முன்னாள் […]

பிரான்ஸில் மாற்றுத் திறனாளி பராமரிப்பு மையத்தில் தீ

பிரான்ஸில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி எல்லைக்கு அருகில் வின்ட்ஸென்ஹீம் நகரில் அமைந்துள்ள இந்த மையத்தின் இரண்டாவது மாடியில் புதன்கிழமை மாலை திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக 17 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் 2வது மாடியில் சிக்கிய 11 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.     […]

ஈகுவடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை

தென்அமெரிக்காவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள நாடு ஈகுவடார். போதைப்பொருள் கடத்தல் அதிகளவு நடக்கும் நாடாகவும், வன்முறைகளுக்கு பெயர் பெற்றதாகவும் இந்த நாடு உள்ளது. ஈகுவடார் நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் உள்ளார். இந்த நாட்டில் விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால், இதில் போட்டியிட்டு வெற்றி பெற பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் நேற்று, தலைநகர் குவிட்டோவில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒருவர் […]

இரவோடு இரவாகக் கலைக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் ‘தோஷகானா’ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை […]

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட வங்காளதேச ஐ.நா. சபை அதிகாரி விடுவிப்பு

வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்பு துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 4 அதிகாரிகளும் கடத்தப்பட்டனர். கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பெற்றது. இதுகுறித்து வீடியோ ஒன்றும் […]