உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் திட்டம்

உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் தி பெல்ட் அண்ட் ரோடு திட்டமானது கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் சாலை மற்றும் கடல் வழியாக மற்ற நாடுகளை தன்னுடன் இணைப்பதே சீனாவின் நோக்கம் ஆகும். மேலும் இந்த திட்டத்தினை ஏற்றுக்கொண்ட நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா ஏற்படுத்தி கொடுக்கிறது. அதன்படி சாலை அமைத்தல், கட்டுமானம், துறைமுக சீரமைப்பு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் முடிவடையாமல் கல்வி, சுகாதாரம், ரெயில்வே போன்ற துறைகளில் சீனா கோடிக்கணக்கில் முதலீட்டையும் […]

பிரித்தானியாவில் இனி சிறை செல்லத் தேவையில்லை

பிரித்தானியாவில் 12 மாதங்களுக்கும் குறைவாக சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இனி சிறை செல்லத் தேவையில்லை என்ற சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியா சிறைச்சாலைகளில் காணப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அங்கு சுமார் 88,225 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களுக்காக, மக்களுடைய வரிப்பணம் ஆண்டொன்றிற்கு 47,000 பவுண்டுகள் செலவிடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , சிறைகள் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக, நீதித்துறைச் செயலரான அலெக்ஸ் சால்க் சில புதிய திட்டங்களை […]

இஸ்ரேல் நிவாரணப் பொருள்கள் அனுமதிப்படவில்லை என்றால் ….?

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் கடந்த 7 ஆம்திகதி ஆரம்பித்த நிலையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட காஸா வட்டாரத்திற்குள் நிவாரணப் பொருள்களை அனுமதிக்குமாறு மனிதாபிமான அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. காஸாவில் தண்ணீர், உணவு, எரிபொருள் ஆகியவை தீர்ந்துவரும் நிலையில் மில்லியன் கணக்கானோரைக் காப்பாற்ற நேரம் குறைந்து வருவதாக மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்தன. இஸ்ரேல் அனுமதிக்காக காஸாவுடனான எகிப்தின் எல்லையில் நிவாரணப் பொருள்களுடன் பல லாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் நிவாரணப் பொருள்களைக் […]

மகாராஷ்டிராவில் பயணிகள் தொடருந்தில் திடீரென தீ விபத்து

இந்தியாவின் மகாராஷ்டிரா – அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் தொடருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில் பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பாரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. குறித்த தொடருந்து அஷ்தி தொடருந்து நிலையத்திலிருந்து அகமதுநகர் தொடருந்து நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையிலே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் இதுவரையில் எந்த தகவலும் […]

அமெரிக்காவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கண்காட்சிக்குள் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா – டெக்சாஸ் மாகாணத்தின் முக்கிய நகரான டல்லாசில் அரசு சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்ணை கவரும் அலங்கார விளக்குகள், விதவிதமான உணவு பண்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளை ரசித்து களித்தப்படி பொதுமக்கள் உற்சாகமாக வலம் வந்தனர். இதன்போது, மர்மநபர் ஒருவர் கண்காட்சிக்குள் திடீரென புகுந்து அவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு சரமாரி தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் […]

ஹமாஸை அழிப்பதுதான் ஒரே வழி – இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும், என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.ஸிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தச் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இஸ்ரேல் மீண்டும் காசாவை ஆக்கிரமிப்பது தவறு,” என்று கூறினார். ஆனால், “தீவிரவாதிகளை” அகற்றுவது “மிகவும் அவசியமானது” என்று அவர் கூறினார். மேலும், ஹமாஸ் ‘முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமா’ என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, ‘ஆம்’ என்று […]

ஆப்கானிஸ்தான் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஹெராட் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. ஏற்கனவே நிலநடுக்க பாதிப்பால் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நியூயார்க்கில் பாரிய ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்களின் பின்னணியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பலஸ்தீனத்தை ஆதரித்து நியூயார்க்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் மோதலின் பின்னணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்ற இந்த போராட்டம் இடம் பெற்றுள்ளது. பலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதாக போராட்டக்காரர்கள் இஸ்ரேலை விமர்சித்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதற்கும் இங்கு கடும் எதிர்ப்பு […]

சுவீஸ் நாட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையரும் போட்டி.

( வாஸ் கூஞ்ஞ) எதிர்வரும் 22 ஆம் திகதி (22.10.2023) நடைபெற இருக்கும் சுவீஸ் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை மன்னார் மாவட்டம் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் திரு சந்தியாப்பிள்ளை கபிரியேல் இத் தேர்தலில் போடடியிடுகின்றார். இவர் மன்னார் பறப்பாங்கண்டல் கிராமத்தில் 14.02.1957 இல் பிறந்தவர். இலங்கையின் வன்செயல் காரணமாக 1984 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தார். பின் அங்கிருந்து 1986 ஒஸ்ரியா என்ற இடத்துக்குச் சென்றார். அந்த நாட்டில் நான்கரை வருடங்கள் பல்கலைக்கழகப் […]

பாலஸ்தீனியர்களின் வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனியர்களின் வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று மாலை தென்காசாவை நோக்கி இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இடம்பெற்றுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் பெரும் அழிவு இடம்பெற்றுள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வடகாசாவிலிருந்து தென்காசாவை நோக்கி செல்லும் சலா அன் டின் வீதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து பெருமளவு மக்கள் இடம்பெயரத்தொடங்கியாதால் அந்த பகுதியில் பெருமளவு சனநெரிசல் காணப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் […]