பாகிஸ்தான் ரெயில்வே, அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த ரெயில் விபத்து

பாகிஸ்தானில் கடந்த 6-ந் தேதி கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற ஹசரா ரெயில் விபத்துக்குள்ளானது. இதில் 10 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 34 பேர் பலியானார்கள். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த ஹசரா ரெயில், பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் […]

சந்திரயான்-3 விண்கலம் நிலவு சுற்றுப்பாதையில்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. இந்த நிலையில், சந்திரயான் விண்கலத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதையின் உயரம் 2-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. […]

உலக வெப்பநிலை அதிகரிப்பு குறைப்பதற்கு நடவடிக்கை

காலநிலை மாற்றம் காரணமாக உலக சராசரி வெப்பநிலை அதிகரித்து வருவதால் அதனை குறைப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவித்தார். இதன் மூலம் காற்று, பசுமை ஹைட்ரஜன் […]

அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் இந்தியர்களுக்கு முக்கிய பதவி

அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் சமீப காலமாக இந்தியர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியான வைபவ் தனேஜா (வயது 45) தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த பொறுப்பில் உள்ள சச்சரி கிர்கோர்ன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் வைபவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ள வைபவுக்கு கணக்கியல் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. […]

சஹாரா கடற்கரையில் கப்பல் விபத்து – 16 பேர் பலி

துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையில் படகுகளில் ஆபத்தான முறையில் பயணங்கள் செய்கின்றனர். இந்நிலையில் விபத்து ஏற்பட்ட கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ள நிலையில் , 16 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான 44 பேரை தேடும் பணியில் […]

அவுஸ்திரேலியாவில் மாயமான இலங்கை வம்சாவளி இளைஞர்

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. காணாமல்போனவர் 18 வயதுடைய திஷாந்தன் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (4) முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் வைத்தே காணாமல் போன நிலையில் அவர் கடைசியாக காரில் பயணித்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இளைஞர் மாயமானது குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு…!

ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ப் பகுதியில் ள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு வெடிக்காத நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மக்களையும் அந்த பகுதியிலிருந்து தற்காலிகமாக வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த பகுதியில் […]

தாவரங்கள் திருடப்படுவதனை தடுக்க விசேட பாதுகாப்பு

டொரன்டோவின் பூங்காக்கள் மற்றும் தாவர பண்ணைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் டொரன்டோவின் பெய்ரே பகுதியில் சுமார் 100 டாலர்கள் பெறுமதியான இரண்டு தாவரங்கள் களவாடப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு பல்வேறு இடங்களில் தாவரங்கள் களவாடப்படும் சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. வீடுகளில் வளர்க்கப்படும் சிறு தாவரங்கள் முதல் பூங்காக்களில் வளரும் தாவரங்களும் இவ்வாறு களவாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாவரங்கள் களவாடப்படுவதனால் பாரியளவு நட்டம் ஏற்படுவதாக பூங்கா உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தாவரங்கள் திருடப்படுவதனை […]

மக்களவையில் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு

ஆப்கானிஸ்தானில் இலவச உணவு சாப்பிட்ட சிறுவர்கள் 200 பேர் மயக்கம்

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணம் சட்காய் பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. அதன் சார்பில் அங்குள்ள பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனை வாங்கி சுமார் 500 பேர் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவர்கள் உள்பட பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன்படி சுமார் 200 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.