இன்று கருணாநிதியின் நினைவு தினம்

இன்று தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணி நிறைவில் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.     […]

வங்காளதேசம் முழுவதும் டெங்கு காய்ச்சல்

பருவமழைக் காலத்தில் கொசுக்களால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாக வங்காளதேசம் விளங்குகிறது. கடந்த ஜூன் மாதம் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டதால் வங்காளதேசம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை அந்த நாட்டில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 303 பேர் தீவிர காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் […]

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்தை அடுத்து அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழுந்து விட்டு தீ எரிந்ததால் கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு […]

திருட வந்த வீட்டின் நாயோடு கொஞ்சி விளையாடிய நவீன திருடன்!! ( CCTV காட்சி)

கராஜ் கதவு திறந்திருந்த வீட்டிலிருந்த சைக்கிளொன்றை திருட சென்ற திருடனொருவன்  அந்த வீட்டிலிருந்த நாயுடன் கொஞ்சி குலாவும் காட்சி  இணையத்தில் தற்போது வைரலாக இருக்கிறது. அமெரிக்க நாட்டின் சென் டியகோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த திருடன் சைக்கிளை எடுத்து வெளியேற முற்படும் வேளையில் வீட்டினுள்ளே இருந்த கோல்டன் ரிட்டிர்வர் ரக நாய் திருடனை நோக்கி ஓடி வந்துள்ளது. திருடன் உடனடியாக கொஞ்சம் கூட அஞ்சாது நாயை அன்பாக கொஞ்சி விளையாடி சைக்கிளை எடுத்து சென்று […]

தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வட கொரியா

தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. 80 க்கும் மேற்பட்டோர் காயம் இந்த நிலையில் வட கொரியாவின் முக்கிய ஆயுத தொழிற்சாலைகளில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராக்கெட் லாஞ்ச்சர்கள், ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் விதமாக […]

உங்கள் உரிமையை பெறும்வரை தொடர்ந்து போராடுங்கள்- இம்ரான்கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமின்றி இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, இந்த ஊழல் வழக்கு தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இம்ரான்கான் குற்றவாளி என நேற்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, […]

ராஞ்சியில் இருந்து கிரிதி நோக்கி சென்ற பஸ் விபத்து

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதியில் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ராஞ்சியில் இருந்து கிரிதி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பராக்கர் ஆற்றின் பாலத்தில் செல்லும்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் உயிருக்கு போராடினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வெவ்வெறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். […]

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

உலகில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ள நிலையில், கட்டிடங்கள் இடிந்து மக்கள் காயமடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டாக் மாகாணம் டெசா நகர் அருகே இன்று அதிகாலையில் மக்கள் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.33 மணியளவில் சீனாவின் டெசா நகர் அருகே திடீரென கட்டிடங்கள் குலுங்கின. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் […]

அமெரிக்காவில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு

அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 லிட்டர் தண்ணீரை- அதாவது 4 பாட்டில் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் கூறியதாவது: வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீரை குடித்துள்ளார். 20 நிமிடங்களில் சுமார் 2 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் […]

பாகிஸ்தானில ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து 15 பேர் மரணம் ! 50 ற்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் சர்ஹாரி நகரில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 ற்கும் மேறபட்டோர்காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ரயில்வே அமைச்சர் சாத் ரபீக் தெரிவித்துள்ளார் #WATCH:- Another video of Train accident in Pakistan: At least 15 dead and 50 injured after 10 coaches of Rawalpindi-bound Hazara Express derails near Sahara Railway Station #Pakistan #Hazaraexpress #Accident […]