இம்ரான் கானுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் போராட்டம்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைதினை அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.   Protest footage from Zaman Park.🔥🔥🔥#پر_امن_ملک_گیر_احتجاج #نااہل_ہوگا_تیرا_باپ #ZamanPark #ImranKhan #BehindYouSkipperpic.twitter.com/s8jaQsiISN — کپتان کا لاڈلا (@FakharSamtiah) August 5, 2023 அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பையடுத்து லாகூரில் […]

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குவாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம் நடந்துள்ளது. கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 8.36 மணிக்கு புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, 129 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அட்சரேகை 73.32 ஆகவும், தீர்க்கரேகை 184 ஆகவும் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

அலெக்சி நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. கடந்த 2020-ம் ஆண்டு இவரை கொலை செய்யும் நோக்கில் விமான நிலையத்தில் அவர் குடித்த டீயில் நோவிசோக் என்ற ரசாயன நஞ்சு கலந்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ரசாயன தாக்குதலுக்கு ஆளான நவால்னி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று மீண்டும் ரஷியா திரும்பியபோது விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். பழைய பண மோசடி வழக்கில் […]

இம்ரான் கான் மீண்டும் கைது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தோஷாகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் பணம் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இம்ரான் கான் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுமென்றே போலியான விவரங்களைச் சமர்ப்பித்துள்ளார், மேலும் அவர் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு உள்ளது என நீதிமன்றம் கூறி உள்ளது. 3 ஆண்டுகள் […]

நியூயார்க் நகரில் இலவச பரிசு – அலைமோதிய மக்கள் கூட்டம்

நியூயார்க் நகரில் பெரிய பரிசை இலவசமாக வழங்கப்போவதாக இணையத்தில் வெளியான தகவலால் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்நிலையில் குவிந்த கூட்டத்தைக் கலைக்க நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் களமிடக்கப்பட்டனர். இணைய தளங்களில் காணொளிகளும் நேரடி ஒளிபரப்புகளும் செய்யும் காய் செனட் நியூயார்க் நகரில் பெரிய பரிசு ஒன்றை வழங்கப்போவதாகத் தமது Instagram பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் இலவசமாக PlayStation 5 கருவிகளை வழங்கவிருந்ததாகக் கூறப்படும் நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதியது. கடையின் கூரை, காரின் […]

ஜார்ஜியாவில் நிலச்சரிவு 11 பேர் பலி

ஜார்ஜியாவில் உள்ள ஷோவி மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மினரல் வாட்டருக்கு பெயர் பெற்ற ராச்சா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரோன் மூலம் எடுக்கப்பட்ட நிலச்சரிவு தொடர்பான வீடியோவில் அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள், குப்பைகள் சரிந்து விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது. சிலரை காணவில்லை என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜார்ஜியாவின் பிரதமர் இராக்லி கரிபாஷ்விலி கூறியுள்ளார்.

அமெரிக்கா சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது திடீரென டயர் வெடித்து தீப்பிடித்ததில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று , வர்ஜினியாவிலிருந்து 190 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 757 விமானம், கடந்த புதன்கிழமை மாலையில் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது திடீரென டயர் வெடித்து அதிலிருந்து நெருப்பும் புகையும் வெளிப்பட்டது. இதையடுத்து டாக்ஸி வே பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால […]

” சூட்டுடன், கொசு தொல்லை 600க்கும் மேற்பட்ட சாரணர்கள் பாதிப்பு! நிலைமையை கட்டுப்படுத்த தென் கொரியா நடவடிக்கை !

வெப்ப அலைகள் காரணமாக தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக சாரணர் சந்திப்பில் 600க்கும் மேற்பட்ட சாரணர்கள் உடல்நல குறைவுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகளை வழங்க ஏராளமான மருத்துவ   Dozens of military doctors and nurses were deployed to the camp site of the World Scout Jamboree in Buan, South Korea, as the teenage attendees struggled to cope with the extreme temperatures […]

மூளையை உண்ணும் அமீபா……

அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றால் மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவின் நெவாடா பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுவன் இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு வைத்தியர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளை தொற்று […]