செய்யூரில் தீயில் கருகிய ரூ.15 லட்சம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூரில் பத்திரப்பதிவு எழுத்தாளராக வேலை செய்து வருபவர் செய்யூர் பாளையர் மடம் பகுதியை சேர்ந்த தியாகு. இவர் தன்னுடைய அண்ணன் வீட்டு மாடியில் குடிசை அமைத்து அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நேற்று கர்ப்பிணியாக இருக்கும் தன்னுடைய மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக மேல்மருவத்தூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். நேற்று பகல் 12 மணி அளவில் அவருடைய குடிசை மின்கசிவு காரணமாக முழுவதும் எரிந்து சாம்பலானது. குடிசையில் தியாகு வீடு கட்டுவதற்காக […]

வடக்கு ஆப்கானிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழுகை நடவடிக்கைகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜேர்மனியில் இடம்பெற்ற வீதி விபத்து

ஜேர்மனியில் நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் முனிச் நகரின் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் வேகமாக பயணித்த ஜீப் ரக வாகனத்தை காவல்துறை சோதனை சாவடியில் நிறுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும் காவல்துறையினரின் இந்த அறிவுறுத்தலை மதிக்காது வேகமாக பயணித்த ஜீப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அவ் ஜீப் ரக வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த சேவை வர்த்தகத்தை மேம்படுத்தும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால பிணைப்பை வலுப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையை காணொளி மூலம் கொடியசைத்து ஆரம்பித்து வைத்த நிகழ்வின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்;டுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய விஜயத்தின் போது, இரண்டு […]

நாகை- இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த 10ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு கடந்த 7ம் தேதி வந்தது. இந்த கப்பல் சோதனை ஓட்டம் 8ம் தேதி நடந்தது. இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சென்ற கப்பல், அங்கிருந்து புறப்பட்டு நாகை திரும்பி வந்தது. கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை […]

பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின இதனால், மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த எகிப்து

இஸ்ரேல் காசா அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிட்டு விட்டது என எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த கூடும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே இஸ்ரேலுக்கு எகிப்து உளவுத்துறை தகவலை பகிர்ந்து இருந்தது. இருப்பினும், இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியதில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை […]

மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை

மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் நெருப்பு வளைய கிரகணமாக தெரியும். இந்த நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வை காண முடியும். சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்வதால் உலகின் எந்த மூலையில் வசிப்பவர்களும் நாசா இணைய தளத்தில் காணலாம். இந்த நிகழ்வை காண வானியல் ஆர்வலர்களும், […]

இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் ……??

இலங்கையில் இருந்து தற்போது இஸ்ரேலுக்கு செல்வதற்கு தயாராகி இருப்பவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் தற்போது உக்கிரமான தாக்குதல் இடம்பெற்று வரும் சூழலில் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை, இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் இருவர் தொடர்பில் கவலைக்குரிய செய்தி கிடைத்திருக்கின்றது என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டினார். […]

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் – யாழ்ப்பாண தமிழர் ஒருவர் போட்டி

நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளானந்தம் பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் போட்டியிடவுள்ளார். நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் நாளை சனிக்கிழமை (14.10.2023) நடைபெறவுள்ளது. வேட்பாளரான செந்தூரன் அருளானந்தம் இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் பாரிய கட்டுமான திட்டங்களில் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். அத்துடன், நியூசிலாந்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் அவர் […]