கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேரை கோவா போலீசார் கைது செய்தனர் பனாஜியின் புறநகரில் உள்ள போர்வோரிம் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் இவர்கள் பதுங்கி இருந்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை […]

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை – 5 ஆண்டுகளாக உயர்வு

கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களின் பணி காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற ஏராளமான வெளிநாட்டினர் விண்ணப்பித்துள்ளனர். கிரீன் கார்டை பெற லட்சக்கணக்கானோர் காத்து இருக்கும் நிலையில் , கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுமதி செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் வேலை வாய்ப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் […]

ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் – 20 அமெரிக்கர்கள் உயிரிழப்பு

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 20 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 அமெரிக்கர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல் காரணமாக அமெரிக்க பிரஜைகள் இஸ்ரேல் செல்வதை தவிர்க்குமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – மு.க.ஸ்டாலின்

ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, ஏழுதேசம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் எல்.லெரின்ஷோ, த/பெ. கிளாரன்ஸ் என்பவர் 9-9-2023 அன்று ஓமன் நாட்டின் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு […]

இஸ்ரேலில் அனைத்து பாடசாலைகளையும் மூட இராணுவம் உத்தரவு

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் குழுவினரிடையேயான போரை தொடர்ந்து இஸ்ரேலில் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நாட்களில் மூட இராணுவம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் எவ்வித முன்னறிவிப்பு மின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் நடத்தியது. இதேவேளை, ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், 48 மணித்தியாலத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இதுவரை […]

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் – வெடிகுண்டு புகலிடங்களை நோக்கி ஓடிய மக்கள்

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் – வெடிகுண்டு புகலிடங்களை நோக்கி ஓடிய மக்கள் இஸ்ரேலின் கடலோர நகர் மீது ஏவுகணை தாக்குதல் எதிரொலியாக அபாய ஒலி எழுந்ததும், புகலிடங்களை தேடி மக்கள் ஓட்டம் பிடித்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதி மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளன இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் […]

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும்

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு ஹெராத் மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் உடனடியாக வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் எச்சரிக்கை விடுத்த – ஹமாஸ்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நீடித்துவரும் நிலையில் பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் போதும் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்படுவார் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஹாமாஸால் பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட மக்கள் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை […]

காவிரி நதி நீர் எங்கள் உரிமை -சீமான்

காவிரி விவகாரம் 2024 தேர்தலில் பாதிக்குமா எனக் கேட்கிறார்கள், பாதிக்குமா இல்லை… நான் பாதிக்க வைப்பேன். தேர்தலில் ஒரு இடத்தில்கூட இந்த காங்கிரஸ், பா.ஜ.கவை வெல்ல விடாமல் தடுக்க வேண்டும்” – சீமான் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையில்லை, வறட்சியால் அணைகளில் நீர்வரத்து 53% குறைந்துவிட்டது, ஆகவே தமிழ்நாட்டுக்குத் தருவதற்கு, கர்நாடகாவிடம் தண்ணீரே இல்லை” எனப் பழைய புராணத்தை மீண்டும் வாசித்து, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளைக் காலில் போட்டு மிதித்து தமிழ்நாட்டுக்குத் தேவையான […]

சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம்

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் கூறி உள்ளது. கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகம் ஆகும். இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய வினியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.