காசா பகுதி முழுமையாக முற்றுகை

உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறுகையில், “காசா பகுதியை முழுமையாக முற்றுகையிட உத்தரவிட்டுள்ளேன். மின்சாரம் இருக்காது, உணவு இல்லை, எரிபொருள் இருக்காது, அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நாங்கள் மனித விலங்குகளுடன் போராடுகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். காசாவின் வான்வெளியை, கரையோரபகுதியை இஸ்ரேல் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. இந்நிலையில் காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டுசெல்லவேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது . இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் […]

ஐ.ஐ.டி வளாகத்தில் உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு…

உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பிடிப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மலைப்பாம்பானது சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிடிக்கப்பட்ட 7 முதல் 8 அடிகள் கொண்ட இந்த மலைப்பாம்பு குட்டி கிண்டி தேசிய பூங்கா அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி பெண்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் உடலை காலால் மிதித்தபடி நிர்வாணமாக டிரக்கில் தூக்கிச் செல்லும் ஹமாஸ் தீவிரவாதிகள் அந்த உடலின் மீது எச்சிலை துப்பி அவமரியாதை செய்கின்றனர். அதுமட்டுமல்லாது ,அதனைக் கண்டு டிரக்கை சுற்றி நின்றவர்களும் ஆரவாரம் செய்கின்ற காணொளி மனித உரிமை ஆர்வலர்களை […]

இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்த ஹமாஸ்

இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ்ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன. இஸ்ரேலியின் பிரதான விமானநிலையமான பென்குரியன் விமானதளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் வீடுகளை இலக்குவைத்தல் உட்பட ஏனைய குற்றங்களிற்காக இந்த தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நகரமான அஸ்கெலென் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும் இதன்போது […]

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,000

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலையில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்து உள்ளதாக தலீபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்கு இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என […]

இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருந்து….

இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய மஹாராஸ்டிரா சேர்ந்த இந்திய நிறுவனம், இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இலங்கை இறக்குமதியாளர், அத்துடன் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட துறைமுகம் மற்றும் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட துறைமுகம் பற்றிய விபரங்களைக் கேட்டு இந்த இந்திய நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. அத்துடன் இந்தியாவின் மத்திய, மாநில மற்றும் பிராந்தி உணவு […]

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 200 பேர் பலி, 2,000 பேர் காயம் –

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. இதில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி விட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலோ, ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இருபதே நிமிடங்களில் […]

பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை – ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. இந்த நிலையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ வட்டி) விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவிகிதமாகவே நீடிக்கும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி […]

அமெரிக்காவில் 16 சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த செவிலியர்…

அமெரிக்காவில் 16 சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த ஆண் செவிலியருக்கு 690 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், வேலைக்கோ, வெளியூருக்கோ செல்லும் பெற்றோர் வீட்டில் தனியாக உள்ள குழந்தைகளைப் பராமரிக்க செவிலியர்களை நியமிப்பது வழக்கம். அந்தவகையில் செவிலியர்களுக்கான இணையதளம் மூலம் மேத்யூ ஜாக்ஜெவ்ஸ்கி என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் 8 வயது மகனைப் பராமரிப்பதற்காக நியமித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுவனிடம் ஜாக்ஜெவ்ஸ்கி […]

அமெரிக்காவில் நண்பர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் நண்பர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் பஸ்ஸில் சென்று கொண்டு இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் ஹோலியோக் பகுதியில் நண்பர்கள் கூடி அரட்டை அடித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு, அதில் ஆத்திரமடைந்த ஒருவர் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். அந்த நேரம் பார்த்து அப்பகுதி வழியாக சென்ற பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் இருந்துள்ளார், அவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து […]