பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த – ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- நெல்லை-சென்னை, சென்னை-விஜயவாடா இடையே இரண்டு புதிய ரெயில்கள் உட்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்ததற்காக பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் பயண நேரம் தற்போது 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த […]

குஜராத்தில் திடீரென இடிந்து விழுந்த பாலம்

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை இந்த பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இரு துண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததால், அதன் மீது சென்றுகொண்டு இருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றில் விழுந்தன. உடனடியாக […]

7 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்டிருந்த விண்கலம் – பூமிக்கு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) அனுப்பிய ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex ) விண்கலம் நேற்று (24.09.2023) உட்டா (Utah) மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அது விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிறு கோள்களின் ஆகப்பெரிய மாதிரிகளை அது பூமிக்குக் கொண்டுவந்தது. சூரிய மண்டலத்தின் அமைப்பு, பூமி எப்படி மனித வாழ்க்கைக்கு ஏற்புடையானது முதலியவற்றை மேலும் புரிந்துகொள்ள அந்த மாதிரிகள் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலம், […]

தென் ஆப்பிரிக்காவில் தீவிரமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல்

தென் ஆப்பிரிக்காவில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என தென்னாப்பிரிக்க கோழிப்பண்ணையாளர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது தென்னாப்பிரிக்காவை பாதித்துள்ள மிக மோசமான பறவைக் காய்ச்சல் தொற்றை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 5.3 மில்லியன் டொலர் பெறுமதியான 2 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கோழி இறைச்சி மற்றும் […]

சீன தயாரிப்புகளால் ஆபத்து

மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு வர்த்தகத்தில் பெரும்பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது. சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ. ஆகியவைதான் ஜெர்மனிக்கு பாகங்களை வழங்கி வருகிறது 5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும் சீனாவின் முக்கிய நிறுவனங்களான ஹுவாய் (Huawei) மற்றும் இசட்.டி.ஈ. (ZTE) ஆகியவைதான் வழங்கி வருகிறது. தற்போது ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம், சீனாவின் தயாரிப்புகளால் தேசிய பாதுகாப்புக்கான ஆபத்துக்கள் வரக்கூடும் எனவும் அதனால் அதனை […]

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகத்திற்கு 3 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மற்ற 2 பேரை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரில் ஒருவரும் கைத்துப்பாக்கியை எடுத்து பதிலுக்கு சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த தெருவில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் […]

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற மகள்

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் குஜ்ஜார்புரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மீது கொலை குற்றச்சாட்டு பதிவானது. அந்த சிறுமி, துப்பாக்கியை பயன்படுத்தி அவருடைய தந்தையை சுட்டு கொன்றுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி சொஹைல் கஸ்மி கூறும்போது, அந்த சிறுமி 3 மாதங்களாக நரக வேதனையை அனுபவித்து உள்ளார். கடந்த 3 மாதங்களாக சிறுமியை, அவருடைய தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், தந்தையை கொலை செய்வது என முடிவு […]

சோமாலியாவில் தற்கொலைப் படை தாக்குதல் 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பெலிட்வினி நகரில் வாகனம் ஒன்று வெடிமருந்துகளை நிரப்பி கொண்டு சென்றது. அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த தற்கொலைப் படை தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்தவெள்ளத்தில் 15 பேர் உயிாிழந்தனர். இதில் 5 பேர் காவல்துறையினர் ஆவர். மேலும் இந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் போட்டியிடப்போகும் கமலஹாசன்!

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை வந்தடைந்தார். அங்கு கோவை மண்டல அளவிலான தனது கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், “எனக்கு பல்வேறு பகுதியிலிருந்து அழைப்புகள் வருகிறது. அதிலும் எனக்குக் கோவையில் பெரும் ஆதரவு இருக்கிறது. விக்ரம் படத்திற்குக் கூட்டம் கூடும் […]

மக்களவையில் கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் ஓம் பிர்லா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது .புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது. முன்னதாக இந்த மசோதா மீது விவாதமும் நடைபெற்றது. அதேபோல், சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றது குறித்தும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலி குறித்து பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி […]