காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள்

காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமல்லாது எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து 14-வது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரை, வான் மற்றும் […]

வியட்நாமில் அதிகரித்து வருகின்ற டெங்கு நோய் பரவல்

வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மாதம் இறுதிவரை ஒருவாரத்திற்கு 3 ஆயிரம் என டெங்கு பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த மாதம் தொடங்கியது முதல் இருமடங்காக உயர ஆரம்பித்துள்ளது. இதுவரை டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தலைநகரான ஹனோயில் மட்டும் 20,548 பேர் டெங்கு காய்ச்சலால் […]

கென்யாவில் பெண்கள் மாத்திரமே வாழ்ந்து வரும் கிராமம்

கென்யாவில் பெண்கள் மாத்திரமே வாழ்ந்து வரும் கிராமம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் நைரோபியில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள உமோஜா என்ற கிராமத்திலேயே இவ்வாறு பெண்கள் மாத்திரம் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அந்த கிராமத்தில் ஆண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழக்கூடிய பெண்கள் அனைவரும் சம்பூர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இங்கு 40 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமம் சுமார் […]

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இராணுவ கண்காட்சி – தென்கொரியா

இராணுவ பொருட்களை ஏற்றுமதி செய்யும் உலகின் 4 ஆவது பெரிய நாடாக மாறுவதை தென்கொரியா நோக்கமாக கொண்டு செயல்படுகிற நிலையில் அதன் ஒருபகுதியாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவிலான இராணுவ கண்காட்சியை தென்கொரியா நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இராணுவ கண்காட்சி சியோல் ஏ.டி.எக்ஸ் – 2023 என்ற பெயரில் சியோங்னாம் அருகே உள்ள விமான தளத்தில் நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் அமெரிக்கா, கனடா, பிரேசில் உள்ளிட்ட 55 நாடுகளின் […]

ஜெர்மனி நாட்டில் யூத வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர்கள்

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்தில் யூத வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து வெடிக்கும் தன்மை உடைய வேதிப்பொருட்களை வீசிவிட்டு தப்பியோடினர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதேவேளை, தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஜெர்மனி பிரதமர் […]

காசாவுக்கு 832 டொலர்கள் நிதியுதவி வழங்கவுள்ள அமெரிக்கா

காசாவுக்கு 832 அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு தமது ஆதரவை வழங்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்ரேலின் மத்தியப் பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்புவதற்கும் அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் முடிவு

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி மாற்றங்களை செய்தார். டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றினார். தற்போது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பயனர்களிடம் சந்தா வசூலிக்கும் நடைமுறையை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதாகவும், அடிப்படை அம்சங்களுக்கு ஒரு டாலர் (இந்திய மதிப்பில் ரூ.83) […]

உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் திட்டம்

உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் தி பெல்ட் அண்ட் ரோடு திட்டமானது கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் சாலை மற்றும் கடல் வழியாக மற்ற நாடுகளை தன்னுடன் இணைப்பதே சீனாவின் நோக்கம் ஆகும். மேலும் இந்த திட்டத்தினை ஏற்றுக்கொண்ட நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா ஏற்படுத்தி கொடுக்கிறது. அதன்படி சாலை அமைத்தல், கட்டுமானம், துறைமுக சீரமைப்பு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் முடிவடையாமல் கல்வி, சுகாதாரம், ரெயில்வே போன்ற துறைகளில் சீனா கோடிக்கணக்கில் முதலீட்டையும் […]

பிரித்தானியாவில் இனி சிறை செல்லத் தேவையில்லை

பிரித்தானியாவில் 12 மாதங்களுக்கும் குறைவாக சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இனி சிறை செல்லத் தேவையில்லை என்ற சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியா சிறைச்சாலைகளில் காணப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அங்கு சுமார் 88,225 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களுக்காக, மக்களுடைய வரிப்பணம் ஆண்டொன்றிற்கு 47,000 பவுண்டுகள் செலவிடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , சிறைகள் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக, நீதித்துறைச் செயலரான அலெக்ஸ் சால்க் சில புதிய திட்டங்களை […]

இஸ்ரேல் நிவாரணப் பொருள்கள் அனுமதிப்படவில்லை என்றால் ….?

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் கடந்த 7 ஆம்திகதி ஆரம்பித்த நிலையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட காஸா வட்டாரத்திற்குள் நிவாரணப் பொருள்களை அனுமதிக்குமாறு மனிதாபிமான அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. காஸாவில் தண்ணீர், உணவு, எரிபொருள் ஆகியவை தீர்ந்துவரும் நிலையில் மில்லியன் கணக்கானோரைக் காப்பாற்ற நேரம் குறைந்து வருவதாக மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்தன. இஸ்ரேல் அனுமதிக்காக காஸாவுடனான எகிப்தின் எல்லையில் நிவாரணப் பொருள்களுடன் பல லாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் நிவாரணப் பொருள்களைக் […]