கனேடிய தெருவிழா! தமிழர்களின் திருவிழா நாளை கோலாகலமாக ஆரம்பம்!!

கனடா வாழ் தமிழர்கள் கொண்டாடும் ” தமிழ் தெரு விழா” நாளை டொரோன்டோ ஸ்காபுரோவில் ஆரம்பமாகிறது. 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம்பெறும் இந்த நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கலந்து சிறப்பிக்கிறார். ஆரம்ப நிகழ்வு நாளை நண்பகல் 12 மணிக்கு மார்க்கம் ரோட்டில் ( மெக்னிக்கல் –  பாஸ்மோர் இன்டர் செக்ஸன்) ஆரம்பமாகிறது. தமிழகத்தின் இசைக்கலைஞர்கள். ஈழத்து கலைஞர்கள் மற்றும் கனேடய கலைஞர்கள் கலந்து கொள்ளும் இசை […]

ஒன்றாரியோ அரசாங்கத்தின் பசுமை பகுதி வீடமைப்பு திட்டம் தொடர்பில் விசாரணை

முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஒன்றாரியோ அரசாங்கத்தின் பசுமை பகுதி வீடமைப்பு திட்டம் தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த வீடமைப்பு திட்டத்தின் போது ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாண வீடமைப்பு அமைச்சின் பிரதம அதிகாரி ரயன் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குறிப்பாக வீடமைப்பு திட்டத்திற்கான கட்டுமான நிறுவனங்களை தெரிவு செய்யும் போது […]

கனடாவில் தமிழர் தெருவிழா

எதிர்வரும் 26ம் திகதி மற்றும் 27ம் திகதிகளில் தமிழர் தெருவிழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் பேரணியும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்ற உள்ளனர். தமிழ் மொழிக்கும், தமிழ் மரபுரிமைகளுக்கும் பங்களிப்பு வழங்கியவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இந்த ஆண்டும் இந்த வீதித்திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

கனடாவில் உயிரை மாய்த்த யாழ் இளைஞன்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் 16 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார். அதேசமயம் இளைஞர் மேலிருந்து விழும் போது இன்னொருவர் மீது மோதுண்டமையினால் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் மேம்பிள் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கனடாவில் அதிகரித்த மளிகைப் பொருள் விலை

கனடாவில் மளிகைப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓராண்டு கால இடைவெளியில் கடந்த ஜூலை மாதம் மளிகைப் பொருட்களின் விலை 8.5 வீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த தகவல்களை கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பேக்கரி உற்பத்திப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்டனவற்றின் விலை உயர்வினால் இவ்வாறு மளிகைப் பொருட்களின் சராசரி விலை உயர்வடைந்துள்ளது. இதேவேளை, பணவீக்க வீதம் கடந்த ஜூலை மாதம் 3.3 வீதமாக பதிவாகியுள்ளது. எதிர்வரும் ஆண்டு முழுவதிலும் பணவீக்க வீதம் சராசரியாக மூன்று […]

ரொறன்ரோ பெருநகர் வீட்டு விற்பனை பின்னடைவு

கனடாவில் வீடு விற்பனைகளில் சாதகமான மாற்றம் பதிவாகியுள்ளதாக ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கனடிய ரியல் எஸ்டே; ஒன்றியம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கூடுதல் அளவில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் மாதத்தை விடவும் ஜூலை மாத வீட்டு விற்பனை 8.7 வீதத்தினால் அதிகரித்துள்ளது. எனினும், ரொறன்ரோ பெருநகர பகுதியில் வீட்டு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் சராசரியாக வீடு ஒன்றின் விலை 668754 […]

கனடா – காட்டு தீ காரணமாக “Yellowknife”லிருந்து 20ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

கனடாவின் டெரிடோரியான நோர்த் வெஸ்ட் டெரிடோரியல் பகுதிகளில் அதிகமான வெப்பநிலை காரணமாக காட்டு தீ பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி 20 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததனை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். இதன்படி இன்கிராம் டிரெயில்,இன் டிட்டா,காம் லேக்,கிரேஸ் லேக், இங்கல் வர்த்தக மைய பகுதியிலிருந்த மக்களே பாதுகாப்பாக அகற்றப்படுகின்றனர்.   Yellowknife residents are evacuating. pic.twitter.com/Qs2rYOsXv1 — +Jon Hansen (@CSsR_Preacher) […]

கனடாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு

கனடாவில் கோவிட் தொற்று அதிகரித்துச் செல்வதாக கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறைவடைந்து சென்ற நிலையில், தற்பொழுது மீண்டும் இந்த நிலையில் மாற்றம் பதிவாகியுள்ளது. இந்த ஏற்ற இறக்க நிலைமையானது எதிர்காலத்தில் கோவிட் தொற்றாளர் அதிகரிப்பு ஏற்படக்கூடியதன் அறிகுறியாக இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக றொரன்டோ மவுன் சினாய் வைத்தியசாலையின் மருத்துவர் எலிசன் […]