ஜெர்மனிய திரைப்பட போட்டியில் சாதித்த இலங்கை இளைஞன்…

ஜெர்மனிய அரசின் டார்ஸ்டாட்  பல்கலைக்கழக இலங்கை இளைஞர் போட்டியொன்றில் வெற்றியீட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லொஸ்ட் இன் லெங்வேஜ் என்ற குறுந்திரைப்படம் சிறந்த திரைகதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினை தொடர்பில் விவாதிக்கும் ஓர் கதைக் கருவினைக் கொண்ட குறுந்திரைப்படமாக இது அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு உதவுமாறு குறித்த தமிழ் இளம் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் முகநூல் பதிவு பின்வருமாறு…. ஜெர்மனிய அரசின் டார்ம்ஸ்டாட் பல்கலைக்கழகம் – திரைப்பட கல்லூரியின் மாணவர்கள் ஆகிய […]

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு கொழும்பில்

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு அடுத்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டின் போது பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள சாத்தியமான தாக்கம் பற்றியும் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, மறுசீரமைப்பு மூலம் ஏற்படும் மாற்றம், மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அபிவிருத்தி செய்வதில் தொழிலாளர்களின் பங்கு என்பன அமர்வின் மையமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காசல்ரி நீர்த்தேக்கத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு

காசல்ரி நீர்த்தேக்கத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் மலைப்பாம்பு சிக்கியிருப்பதனை கண்டு வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து மலைப்பாம்பினை கரைக்கு கொண்டு வந்தபோது அது உயிரிழந்துள்ள நிலையில் பாம்பினை புதைக்குமாறு வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்தில் நடந்த சோகம்

அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பும் போதே குறித்த பேருந்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர் போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவர் என்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சரியான தலைமைத்துவம் இல்லாமையால் தொடர்ந்து பின் தள்ளப்படுகின்றது. அருட்பணி எஸ்.மாக்கஸ்

(வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் ஒரு சரியான தலைமைத்துவம் இல்லாமையாலேயே இன்று மன்னார் தொடர்ந்து பின் தங்கி காணப்படுவதுடன் பல திட்டங்கள் தோல்வியிலும் அழிந்தும் செல்லுகின்றன என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். -உண்மை மற்றும் நல்லிணக்க சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தில் ஐந்து கிராமங்களின் பிரதிநிதிகளுடனும் மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பனர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி […]

இந்திய வம்சாவளி தமிழர்களின் அடையாளத்தை முடக்காதே! கொதித்தெளும் வடிவேல் சுரேஷ் MP

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கைத் தமிழர் என அடையாளப்படுத்த பதிவாளர் திணைக்களத்தால் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அண்மையில் பதிவாளர் நாயகத்தால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட பதிவாளர்க்கும் மேலதிக மாவட்ட பதிவாளர்க்கும் அனுப்பப்பட்டுருகின்ற சுற்றுநிறுபத்தில 11,1 /2023 என்ற இலக்கத்தை கொண்ட சுற்றுநிறுபத்தின் மூலமாக அரசாங்க காரியாலயங்கள், பிறப்புச்சான்றிதழ் மற்றும் ஆள் அடையாளபடுத்த கூடிய அனைத்து ஆவணங்களிலும் இனத்தை […]

இந்திய வம்சாவளி மக்களின் அடையாளத்தை அழிக்க முற்பட வேண்டாம்! பதிவாளர் நாயகத்தின் தீர்மானத்தை எதிர்க்கும் அமைச்சர் ஜீவன்

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.” என இதொகா பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கூறுகிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் பிறப்பு சான்றிதழ் உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்குரிய ஆவணங்களில் “இனத்தைக் குறிப்பிடும் போது இந்திய தமிழ் / சோனகர் என்பதை இலங்கைத் தமிழ்/ சோனகர் என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்” எனும் […]

ஆசிரியப் பெருந்தகைகளுக்கு பேசாலையில் பெருவிழா!

(வாஸ் கூஞ்ஞ) கருவாகி , உருவாகி , குருவாகி , திருவாகி  நின்று அகவிருள் அகற்றி . அறிவொளியூட்டி , நல்நெறி காட்டி நிற்கும் ஆசிரியப் பெருந்தகைகளை நினைத்து மன்னார் மாவட்டத்தில் பல இடங்களிலும் ஆசிரியர் தினம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் பேசாலை மன் சென். மேரிஸ் வித்தியாலயத்தில் செவ்வாய் கிழமை (17) ஆசிரியர் தினமும் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவும் மிகவும் சிறப்பாக பெற்றோர்களால் நடாத்தப்பட்டது. (வாஸ் கூஞ்ஞ)

கொங்கோடியா தோட்டப் பாதையில் பாரிய மண்சரிவு! சாரதிகளே அவதானம்!

¶ (  நூரளை பி.எஸ். மணியம்) தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கந்தப்பளை நகரில் இருந்து கொங்கோடியா, கல்லாலவத்தை தோட்ட வழியாக இராகலையை நோக்கி செல்லும் பிரதான வீதியில் இந்த மண் சரிவு ஏற்பட்டு குறித்த வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  அதேநேரத்தில் காலநிலை மாற்றத்தினால் கந்தப்பளை பிரதேசத்தில் இன்று (18) புதன்கிழமை  அதிகாலையில் முதல் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொங்கோடியா தோட்ட பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்டு செப்பணிடப்பட்ட […]

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக சலீம் நியமனம்!

நூருல் ஹுதா உமர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக சாய்ந்தமருதை சேர்ந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல்கள் மறுசீரமைப்பு சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதற்காக மேற்படி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அல்ஹாஜ் ஏ.எல்.எம். சலீம் கடந்த காலங்களில் இலங்கை பொது சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும், அமைச்சுக்களின் மேலதிக செயலாளராகவும் பதவி […]