நுவரெலியாவில் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி !

(நூரளை பி.எஸ்.மணியம்) நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28 பீ விஜிதபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை  இரவு கத்திக்குத்துக்கு இலக்கான  ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது விஜித்தபுர மார்காஸ்தோட்ட கிராமத்தில்  தனது வீட்டில்  வைத்து கணவன் மனைவிக்கிடையே நேற்று ( 23) சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் வாக்குவாதம் எழுந்துள்ளது. தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் மனைவினால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து […]

துப்பாக்கியுடன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது.!

ராமு தனராஜா பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படையினருக்கு. பசறை தன்னுகை பகுதியில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து சந்தேகத்துக்கு இடமான பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி வெடி மருந்து நிரப்பி சுடக்குடியது என பொலிஸார் தெரிவித்தனர் அத்தோடு 46 வயதுடைய […]

மின்கம்பத்தை மாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை.

ராமு தனராஜா பசறை எல்டப் கிக்கிரிவத்தை 18 வது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மின்கம்பம் முறிந்து விழும் அபாயகரமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள இரண்டு மின்கம்பங்களை மாற்றி தருமாறு கூறி கடந்த பல மாதங்களுக்கு முன் பசறை மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் இருப்பினும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அம்மின்கம்பங்கள் முறிந்து லயன் குடியிருப்பின் மீது விழுமேயானால் பாரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுமார் […]

தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும்

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (23) தொழுநோய் தொடர்பான விசேட பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தொழுநோய் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஒன்றாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்ட இவ்விசேட பயிற்சி நெறியானது கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் டாக்டர் எம்.ஏ.சி.எம்  பஸால் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார […]

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது

நூருல் ஹுதா உமர் Association of Public Finance Accountants of Sri Lanka (APFASL) – Public Sector Wings of CA Srilanka நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கணக்கறிக்கைகளை தயாரிக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களை தெரிவு செய்வதற்கான போட்டியின் போது அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுர நகரில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபை கட்டடத் தொகுதியின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை 22.09.2023 பிற்பகல் நடத்தப்பட்ட விருது […]

நுவரெலியா பொது வைத்தியசாலையில் எதிர்பு ஆர்ப்பாட்டம்

(  நூரளை பி. எஸ். மணியம்) தரம் குறைவான மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு  விநியோகம் செய்வதையும், வைத்தியசாலைகளில்  நிலவும் மருந்துகள் தட்டுபாடு , வைத்தியர்கள் வெளி நாடுகளுக்கு செல்லுதல் , வைத்தியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமை உட்பட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பல குறைப்பாடுகளுக்கு முன் வைத்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகள், சுகாதார வைத்திய சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் இன்று ( 22) […]

நுவரெலியா பம்பரக்கலை பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா.

  ( நூரளை பி.எஸ். மணியம்) நுவரெலியா பம்பரக்கலை தமிழ் வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் எம். பெரியசாமி தலைமையில் இன்று (22) வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.   இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக நுவரெலியா வலய கல்வி அவிருத்திக்கான உதவி கல்வி பணிப்பாளர் திருமதி எஸ். எஸ். வி. சர்மா. விசேட அதிதியாக உதவி கல்வி பணிப்பாளர் ஜானக சரத்சந்திர நுவரெலியா லயன்ஸ் கழக தலைவர் ஜேகதீன் குமரேசன்,ஆசிரிய ஆலோசகர்கள், வள […]

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மருத்துவ முகாம்!!

  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) இடம் பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் மாவட்ட செயலகமும் இணைந்து தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். தற்போதைய காலத்தில் தொற்றா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால் உத்தியோகத்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் […]

மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி தின விழா மீளாய்வுக் கூட்டம்!

( வாஸ் கூஞ்ஞ) 22.09.2023 மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி தின விழாவை முன்னிட்டு எவ்வாறு இவ்விழாவை நேர்த்தியான முறையில் நடத்துவது சம்பந்தமாக புத்தசாசன சமய விவரங்கள் மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்க தலைமையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) நடைபெற்றதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (22.09.2023) மன்னார் […]

சுகாதார துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்.

மலைவாஞ்ஞன்  சுகாதார துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தங்களது உணவு ஓய்வு நேரத்தின் போது போராட்டங்கள் நடத்துவதற்கு சுகாதார துறை தொழிற்சங்கங்கள் இன்று (22) ஏற்பாடு செய்திருந்தன. இதற்கமைய நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார துறையில் காணப்படும் குறைபாடுகளை முன்வைத்து ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் தாதியர்  உள்ளிட்ட பலர் மதிய உணவு வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டகாரர்கள் சுகாதார சேவை உயிருக்கு போராடுகிறது அமைச்சர்கள் […]