கல்வி அமைச்சு அறிக்கை

பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்புக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், கிடைக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு பாடசாலைகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய பாடசாலைகளின் […]

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று ஹர்த்தால்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடகிழக்கு அரசியல் கட்சிகள் இணைந்து இன்று (25) ஹர்த்தால் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து இந்த ஹர்த்தால் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு – கிழக்கு ஹர்த்தால் இயக்கம் காரணமாக அந்த பகுதிகளில் தனியார் பேருந்துகளும் தடைபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இன்றைய பொது முடக்கத்துக்கு […]

யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு நிதி நன்கொடை

கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் ஸ்தாபக தலைவரும் ஓய்வுபெற்ற வலயக் கல்வி பணிப்பாளருமான சரத் சேனநாயக்கவினால் தனது ஆவணப்படுத்தல் மற்றும் விரிவுரைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்குவதற்காக 2 மில்லியன் ரூபாவை இன்று (24) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த தொகையை வடக்கு,கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு செயற்கை கால்களை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.

“கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வுகள் (Photos)

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வுகள் நேற்று (23) டீன்ஸ் வீதிச் சந்தியில் இடம்பெற்றன. இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றதோடு, புத்தாண்டு அழகியாக தெரிவுசெய்யப்பட்ட ஹஷினி சமுதிகா, இரண்டாம் இடத்தைப் பெற்ற செனுகி ரதீஷா, மூன்றாம் இடத்தைப்பெற்ற லக்‌ஷிகா இஷாரா ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து பரிசுகளை பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து சைக்கிளோட்டப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் […]

சஜித் தலைமையில் புதிய கூட்டணி

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைக்க எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சிகளும் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கூட்டணி அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை […]

குடிநீரை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு

மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட களுதாவளை 2 ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வு நேற்று (23.04.2023) இடம்பெற்றது. சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. குடிநீர் வசதி இன்மையால் அப்பகுதி மக்கள் சொல்லொணாத் துயரங்களை பல வருடங்களாக சந்திக்க நேரிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அண்மையில் மாத்தளைக்கு பயணம் […]

பொகவந்தலாவையில் இலவச மருத்துவ முகாம்

பொகவந்தலாவ கொட்டியாகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள  சிறுவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் பொகவந்தலாவ பிளான்டேசன் கிளப்பில் முன்னெடுக்கப்பட்டது. கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் வேல்ட் விசன் அனுசரணையில் நடாத்தப்பட்ட இவ் இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்குபற்றினர். சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்இநன்நடத்தை சிறுவர் சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவும் இணைந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்குடன் சிறுவர்களின் மருத்துவத்தைஇ சுகாதாரத்தைஇபோசாக்கை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இவ் […]

சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டலும், முத்திரை வெளியீடும் நிகழ்வும் நேற்று 23.04.2023 நடைபெற்றது. இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ் குணவர்தனவும், சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.பி.ரட்ணாயக்க, யதாமினி குணவர்தன, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, உதவி தூதுவர் டாக்டர் திருமதி எஸ்.அதிரா […]

பட்டம் பதவி கட்சிகள் வண்ணங்கள் தேவையில்லை

என் மக்களின் முடிவே என் தீர்க்கமான அடுத்த கட்ட அரசியல் நகர்வு எனகிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் பசறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,… “பசறை மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வருகை தராமையானது மக்கள் மத்தியில் இன்றளவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. அதனைத் தொடர்ந்து […]

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடதக்க அதிகரிப்பு எனவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.