விமரிசையாக நடைபெற்ற “வசத் சிரிய 2023” – வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள்

“வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (22) கொழும்பு சங்கிரீலா மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது . “வசத் சிரிய 2023” புத்தாண்டு அழகியாக கொடிகாவத்தயை சேர்ந்த இருஷி காவ்யா அபஷேக தெரிவு செய்யப்பட்டதோடு, இரண்டாம் இடத்தை மொறட்டுவையை சேர்ந்த தாருகா ரஷ்மினியும் மூன்றாம் இடத்தை குருநாகல் கல்கமுவையை சேர்ந்த சுபாஷினி புல்பமாலாவும் பெற்றுக்கொண்டனர். “வசத் சிரிய 2023” புத்தாண்டு அழகனாக மொறட்டுவையை சேர்ந்த சுபோத தனுஷ்கவும் […]

TNA அதிரடி முடிவு

மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளார். குறித்த சட்டமூலம் தனியார் சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நம்மால் முன்னேறிச் செல்ல முடியும்: ஜனாதிபதி

ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்குரிய திட்டமிடல் அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு – வடக்கு துறைமுகத்தின் 30 வருட அபிவிருத்தி திட்டத்தினை வெளியிடுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி […]

ஐவர் படுகொலை:சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீடொன்றில் வைத்து மூன்று வயோதிப பெண்கள் உட்பட ஐவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். சந்தேகநபரான 51 வயதுடைய நபரிடம் இருந்து மூன்று தங்க நெக்லஸ்கள், இரண்டு ஜோடி தங்க வளையல்கள், தனி வளையல் ஒன்று, 8 மோதிரங்கள், இரண்டு காதணிகள் […]

ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகள் இலங்கையில…

ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதன்படி, இலங்கையில் வயது வந்த ஒவ்வொரு நால்வரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது, இது 23% வீதமாகும். கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதாரக் கொள்கை நிறுவனம் மற்றும் கொழும்பு, ருகுணு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள முதியவர்களில் மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், இது […]

நுவரெலியா – ராகலை வரை விரைவில் புதிய ரயில் பாதை

நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார். ” நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் சேவை தேவையாக உள்ளது. எனவே,  மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா – கந்தபளை ரயில் […]

டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்த தாய் பலி

குடும்ப தகராறு தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் 22.04.2023 அன்று மாலை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் வசிக்கும் லெட்சுமனன் நிஷாந்தினி (வயது – 34) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு நீர்வீழ்ச்சியில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு தொடர்பில் முறையிடுவதற்கு இரு பிள்ளைகள் […]

கொலைக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு  மாவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொலைகளுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அந்த வீட்டில் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை அல்லது எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,கூறினார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு  மாவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகாயமடைந்த மற்றுமொரு பெண் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் […]

பாடசாலை போக்குவரத்து சங்கம் எடுத்துள்ள முடிவு

மே 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கே.ஹரிச்சந்திர பத்மசிறி 5% – 8% வரை கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

டெவோன் நீர் வீழ்ச்சியில் குதித்த நான்கு பிள்ளைகளின் தாய்

குடும்ப தகராறு தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யவந்த தாயொருவர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து காணாமல் போயுள்ளார். திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் வசிக்கும் லெட்சுமனன் நிஷாந்தினி (வயது – 34) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குடும்ப தகராறு தொடர்பில் முறையிடுவதற்கு இரு பிள்ளைகள் சகிதம் இவர் பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். முறைப்பாடு செய்ததையடுத்து ஒரு பிள்ளை சகிதம் […]