GL சட்ட நடவடிக்கை எடுக்க திட்டம்

இன்று (22) நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார் ஒரு அறிக்கையை வெளியிடுகையில், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லாது மற்றும் செல்லுபடியாகாது என்று உறுப்பினர் கூறுகிறார். இதேவேளை, அந்த தீர்மானங்களை சட்டவிரோதமானது என அறிவிக்க உரிய நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிடுகிறார்.

SLPPக்கு புதிய தலைவர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அவரது நியமனம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமானது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக […]

மலையகத்தில் நோன்பு பெருநாள்

ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது. முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் மலையகத்தில் […]

நீதி வேண்டும்- கர்தினால்

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமை தொடர்பில் கடந்த அரசாங்கங்களுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் பொறுப்புள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 272 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வரலாற்றில் இருண்ட நாளாகக் குறிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதற்கான நினைவேந்தல் நிகழழ்ச்சியில் உரையாற்றிய பேராயர் இதனை கூறியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் பரீட்சைகள் […]

ஒன்றிணைந்து பயணிப்போம்

பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில், பொருளாதாரம் மேம்பட்டு – பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் இன ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். எனவே, இலங்கை தாயின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” இலங்கையில் முடியாட்சியின் போதும் சரி குடியாட்சியின் […]

பொருளாதார முகாமைத்துவக் கொள்கை அடுத்த மாதத்திற்குள் இறுதி செய்யப்படும்

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொருளாதார முகாமைத்துவக் கொள்கை அடுத்த மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். சிறந்த வர்த்தகர்கள் 40 பேரை கௌரவிக்கும் முகமாக  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற “பிசினஸ் டுடே” விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நோன்புப் பெருநாள் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும்

முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் அண்ணாச்சி இணையதள வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நோன்புப் பெருநாள் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த விழுமியங்களையும் […]

ஹோல்றீம் தோட்டத்தில் தாய் ஒருவர் கொலை

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர்  இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கரப்பத்தனை,  சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் சத்தியபாமா (வயது 68)  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், சின்ன நாகவத்தை தோட்டத்திலிருந்து கடந்த 16 ஆம் திகதி, லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் உள்ள தனது மருமகனின் வீட்டுக்கு சென்றுள்ளார். சம்பவத்தின் பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல்போயுள்ளன. எனவே, நகைகளை பறிக்கும் நோக்கில் […]

மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 80% பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 85% பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மே 15ம் திகதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.