உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மா பெரும் களியாட்ட நிகழ்வு

ஏ.ஆர்.எம்.றிபாஸ் கிண்ணியா நிருபர் இது தொர்பான ஊடக சந்திப்பு இன்று(22) கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தில் பணிப்பாளர் பீ. மதனவாசகம் தலைமையில் நடைபெற்றது இதன் போது சுற்றுலா பணியகத்தின் பொது முகாமையாளர் Dr.ஞானசேகரன் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என். எம். நெளபீஸ் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் ,கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் , கிழக்கு மாகாண சிறுவர் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கலாசார திணைக்களம் இணைந்து […]

மதுபானசாலையை திறந்து வாழ்க்கையை சீரழிக்காதே ! குயில்வத்தை மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

மலைவாஞ்ஞன் ஹட்டன் குயில்வத்தை பகுதியில் மதுபானசாலை ஒன்றினை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. குயில்வத்தை மிகவும் பிரசித்திபெற்ற சிவன் ஆலயத்திற்கு சமீபமாக குயில்வத்தை ரொசல்ல பகுதியில் மதுபானசாலை ஒன்றினை அமைப்பதற்கு மது வரி திணைக்களத்தில் அனுமதி கோரியுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு இருப்பின் 14 பிரதேச செயலாளருக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவித்து அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த அறிவித்தலை தொடர்;ந்து குயில்வத்தை பகுதியில் வாழும் மக்கள் மதுபானசாலை அமைக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து […]

கோஷ்டி மோதல்களை தடுக்க சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

நூருல் ஹுதா உமர் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் அமைதியாக இருந்த முஸ்லிம் பிரதேசங்களில் மீண்டும் வன்முறைகள் தலைதூக்கி இருப்பதையே அண்மையில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும் விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து மோதல்கள் உருவாகும் வரை நாம் காத்திருக்க முடியாது.  எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு மத, அரசியல், சிவில் தலைவர்கள் பாரபட்சமின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும் என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் […]

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,

(அஷ்ரப் ஏ சமத்) பௌத்த சாசனம்  மற்றும் மதவிவகாரங்கள்  கலாச்சார அமைச்சின் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம், (Building Bridge Programme) சர்வமதங்கள் நல்லுரவைக்  கட்டியெழுப்புதல் திட்டத்தின் கீழ்  முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம், தெஹிவளை களுபோவில ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் வெள்ளவத்தை மத்திய இஸ்லாமியக் கல்வி   நிலையமும் இணைந்து இத் திட்டத்தினை இன்று 21 ஆம் திகதி தெஹிவளைப் பள்ளிவாசலில் நடாத்தியது. இந் நிகழ்வு தெஹிவளை ஜூமஆப் பள்ளிவாசல் பரிபாலன சபையினர்,  மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களத்தின் […]

சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி போய், விளையாடும்படி இதொகாவிற்கு அறிவுரை சொல்லும் பரணி !!

நமது தலைவர் மனோ கணேசன் மிகத்தெளிவாக, இரண்டு கைகளும் தட்டினால்தான் சப்தம் வரும். எதிரணியில் இருந்து நாம் பணி செய்கிறோம். ஆளும்கட்சியில் இருந்து நீங்கள் பணி செய்யுங்கள். முரண்பாடு தேவையில்லை. மாத்தளை, இரத்தினபுரி தோட்டங்களுக்கு இதொகா அமைச்சர் போனதை நாம் பாராட்டுகிறோம். ஆனால், அதனால் பிரச்சினை முடியவில்லை. முடியாததால்தானே மீண்டும், மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன? பாராளுமன்றத்தில் நாம் குரல் எழுப்பிய பிறகுதான் பெயரவிலாவது மாத்தளை துணை முகாமையாளர் கைது செய்யப்பட்டார், என்று கூறினார்.   மேலும், […]

தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும் தாமதம் – தொழில்வாய்ப்பின்றி தவிக்கும் மாணவர்கள்!

( நூரளை ரமணன்) தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி கடந்த ஆகஸ்ட் 31 க்கு முன்னர் வழங்கப்படும். என அறிவிக்கப்பட்ட போதும் தேசிய கல்வியல் கல்லூரி அதற்கான  நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட வில்லை. என  கல்லூரிக்கு தெரிவாகிய மாணவர்கள்  குற்றம் சுமத்துகின்றனர். இதுகுறித்து தேசிய கல்வியல் கல்லூரிக்கு தெரிவான மாணவர்கள்  விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் அனுமதிக்காக கடந்த 2019/2020 ஆண்டுகளில் உயர் தரத்தில் தோற்றியவர்கள் இவ்வருடம் ( 2023 ம் ஆண்டு […]

12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில் மணல் எற்றும்   டிப்பர் மோதி குடும்பஸ்தர் பலி!

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட 12ம் கட்டை குளக்கட்டு வாய்க்கால் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம்  புதன்கிழமை (20) மாலை 4.00 மணிக்கு பின்பே நிகழ்ந்துள்ளதாக  தெரிய வருகிறது விபத்து நடைபெற்றதும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின்  சாரதி  மற்றும் உதவியாளர் அங்கிருந்து  தப்பிச் சென்pருந்தபோதும்  பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்  நானாட்டான் பிரதேசத்தில் நாகச் செட்டி பகுதியில் வசிக்கும் […]

மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும் கவனயீர்ப்பு போராட்டம்!

(வாஸ் கூஞ்ஞ) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக்கொண்டு நீண்ட காலங்களாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே உண்மையைக் கண்டறிதல் நீதி மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதுடன் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று மன்னார் மாவட்ட சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. வியாழக்கிழமை (21) காலை 10 மணித் தொடக்கம் 11 மணி வரை மன்னார் மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதியான […]

உல்லாசமாக ஊரை சுற்றி பார்க்க வந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் விபத்தில் காயம்!

ராமு தனராஜா   எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள்  விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பண்டாரவளை எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த 23,23 வயதுடைய இரண்டு பெண்கள் எல்ல புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளல் செல்கையில் கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இரண்டு பெண்களும் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு 1990 […]

திருமலையின் சமூக செயற்பாட்டாளர் ராஜூ மீது TID விசாரணை!

சஷி புண்ணிய மூர்த்தி  கடந்த சில வாரங்களாக திருக்கோணமலையில் பிக்குகளின் அராஜகம் அதிகரித்துள்ள நிலையில், திருக்கோணமலை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது TID விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அச்சுறுத்தபட்டு வருகின்றனர். பெரியகுளத்தில் சட்ட விரோத விகாரை அமைப்பதற்கு எதிராக போராடிய ராஜு எனும் சமூக செயற்பாட்டாளரை TID பிரிவினர், நேற்றைய தினம் (19.09.2023) அவரது வீடு மற்றும் வேலை தளங்களுக்கு தேடிச்சென்று விசாரணை செய்ததுடன், தங்களுடைய அலுவலகத்துக்கு வருமாறும் அழைப்பானை விடுத்துள்ளனர். அவரை மிரட்டும் […]