கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது

அனுமதிப்பத்திரம் இல்லாமல் வேனில் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரம் இல்லாமல் வேனில் கழிவு தேயிலை தூளை ஏற்றிச் சென்ற மூன்று சந்தேக நபர்களை வட்டவளை பொலிஸார் (09) அதிகாலை கைதுசெய்ததுடன் சந்தேக நபர்களை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் தலா இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் 52 பைகளில் 800 கிலோ கழிவு தேயிலை தூளை அக்கரபத்தனையிலிருந்து கம்பளை […]

உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது

உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பஸ்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, […]

மலையகத்திலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடு

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டனர். உலக மீட்பராக அவதரித்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று தினங்களின் பின்னர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஸ்டிக்கப்படுகின்றது. பாதுகாப்புக்கு மத்தியில் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வழிபாடு அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆலய பங்கு தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன. உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு […]

நுவரெலியாவுக்கு 26 புதிய பஸ்கள்

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பஸ்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) போக்குவரத்து அமைச்சர் திரு.பந்துல குணவர்தன தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் இடம்பெற்றது. நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பஸ்கள் இதன்போது கையளிக்கப்பட்டன. மேலும் இந்த புதிய பஸ்களை தோட்ட மற்றும் கிராமப்புற வீதிகளில் பயணிக்கவும், அதன் மூலம் […]

தவறான கொள்கை முடிவுகள்-IMF இலங்கைப் பிரதிநிதிகள் குழு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு) தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் நிவாரணம் கிடைத்துள்ள நிலையில்இ இலங்கையின் பொருளாதார நிலை படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. நீண்டகால பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தவறான கொள்கை முடிவுகளினால் இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்ததாக இலங்கைப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

“ஈஸ்டர் பண்டிகை”

உலகலாவிய கிறிஸ்தவரகள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் ‘இஸ்டர் பண்டிகையை’ கொண்டாடுகின்றனர். உயிர்ப்பு ஞாயிறு பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது. இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். “இஸ்டர் பண்டிகையை’ கொண்டாடும் அனைவருக்கும் annachinews.com இணையதளத்தின் வழ்த்துக்கள் உரித்தாகட்டும். இதேவேளை ‘இஸ்டர் பண்டிகையை’ முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு என்பது இதயங்களில் உள்ள […]

JVP சந்தேகம்

கடந்த வருடம் மத்திய வங்கி ஆளுனர் கடனை திருப்பிச் செலுத்துவதில்லை என்ற தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுடன் பிணைத்துள்ளதாக JVP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய வளங்களை விற்பது சாபமா? பொறியா என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மாநாடு நேற்று (07) பிற்பகல் மஹரகம இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை 3,700,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இதுவரை 3,700,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 3,200,000 க்கும் அதிகமான வீட்டுத் தொகுதிகளுக்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பி. விஜயரத்ன குறிப்பிட்டார். பாராளுமன்றம் மற்றும் அமைச்சர்கள் சபையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் ஜூன் மாத இறுதிக்குள் நலத்திட்ட உதவிகளை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குயில்வத்தை தோட்ட சிவாலயத்தின் 121வது பங்குனி உற்சவம்

ஹட்டன் குயில்வத்த சிவாலய 121வது பங்குனி உற்சவ விஞ்ஞாபனம் மிக சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது காலை அங்கபிரதட்சனம் ஆரம்பிக்கப்பட்டு விநாயகர் பூஜையுடன் விசேட பூஜைகள் இடம்பெற்றன். தொடர்ந்து புனித கங்கையில் இருந்து பால்குடவ பவனி,பறவைகாவடி என மங்கல வாத்தியங்கள் முழங்க தீ மிதிப்பும் இடம்பெற்றது. தொடர்ந்து மகேஸ்வர பூஜையுடன் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீலமேகம் பிரசாந்த்

இலங்கை அரசாங்கத்தின் வசமுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கை

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமை மிகுந்த கவலையளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே தமிழக முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிழக்கு கோடியக்கரை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் சிலரின் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் நான்கு மீனவர்களுக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான […]