தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து முத்தரப்பு பேச்சு

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின், நிர்வாகத்திடம் மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கை அவசியம் எனவும் இ.தொ.கா எடுத்துரைத்துள்ளது. இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையிலான நேரடி கலந்துரையாடலொன்று இராகலை நகரிலுள்ள கலாசார மண்டபத்தில் […]

பொலிஸ்மா அதிபரால் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு ஆலோசனை

தேவாலயங்களை அண்மித்து பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ்மா அதிபரால் இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை காணப்படுமாக இருந்தால், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை அழைக்கும் இயலுமை காணப்படுவதாக அவர் கூறினார். ஏதேனும் தேவைகள் காணப்படுமானால், இராணுவ அதிகாரிகளையும் அழைக்க முடியும் என அவர் தெரிவித்தார். இதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் […]

பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு

  தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்புத்துறை வியாபாரச் சங்கம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது நடைபாதை வியாபாரிகளுடன் சுமூகமாக […]

உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கைக்கு பாராட்டு (Photos)

இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே உலக வங்கி பிரதிநிதிகள் மேற்கண்டவாறு பாராட்டு தெரிவித்திருந்தனர். பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை (Parliamentary budget […]

அபிவிருத்திக்காக நாட்டு மக்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும்

இலங்கை மக்களாக ஒன்றினைந்து பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் அபிவிருத்தியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டினார்.

Nine Arches Bridge பற்றிய புதிய தகவல்

தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை(Nine Arches Bridge) தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செயதி

சிறு போகத்தில் உரத்தை கொள்வனவு செய்வதற்கான நிவாரணத் தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, விவசாயியொருவருக்கு ஒரு ஹெக்டேயருக்கு 20,000 ரூபா கூப்பன் வழங்கப்படவுள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இந்த நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதாரம் 2023 மற்றும் அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும்

இலங்கையின் பொருளாதாரம்  2023 மற்றும் அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 7.8% வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டில் 4.3% ஆக சுருங்கும் எனவும், கேள்வி தொடர்ந்து குறைந்து வருவதால், வேலை இழப்புகள், வருமான இழப்புகள் தீவிரமடைந்து, விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக உற்பத்தி மோசமாக பாதிப்படையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளிநாட்டு, சில உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டும் […]

இந்தியா உதவ வேண்டும்: ஜனாதிபதி

இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் பாரத் லால் தலைமையிலான இந்திய தூதுக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இந்த குழுவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக பாரத் லால் அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக The Hindu தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இலங்கை தொடர்பான தனது தொலைநோக்குப் பார்வை குறித்தும், […]