இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில்…

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பிரவேசித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 2024 இல் பொருளாதாரம் மீள்வதற்கு முன்னர், இந்த ஆண்டு பொருளாதாரத்தில் மேலும் சுருக்கம் ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ADBயின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதாரம் 2022 இல் 7.8% ஆல் வீழ்ச்சியடையும் மற்றும் கடன் மறுசீரமைப்பு மற்றும் கொடுப்பனவுகளின் சமநிலை சிக்கல்கள் காரணமாக 2023 இல் அது மேலும் 3% ஆக வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது

நட்டமடையும் அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு

நட்டத்தில் இயங்கும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை இனி மேல் திறைசேரியால் பாதுகாக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நஷ்டம் அடைவதாகவும் அமைச்சர் கூறினார்.

பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை

வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். தற்போதைய நிலைவரம் மற்றும் விஸ்தரிப்புக்கான தேவைப்பாடுகள் பற்றியும் அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பின்னரே […]

Plan T ஒன்றின் விலையும் குறைக்கப்படவுள்ளது

 எரிவாயு விலை குறைப்பு காரணமாக இன்று (05) நள்ளிரவு முதல் சாப்பாட்டு பார்சல், கொத்து மற்றும் பிரைட் ரயிஸ் ஆகியவற்றின் விலையை 20% குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாதாரணPlan T ஒன்றின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதன்படி, Plan T ஒன்றின் புதிய விலை 30 ரூபாவாகவும், பால் T ஒன்றின் விலை 90 ரூபாவாகவும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒம்புட்ஸ்மனாக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி

நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிம்புரேகம ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156(2) மற்றும் 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியவற்றின் படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு முன்னணி சுற்றுலா தலம்

2023 ஆம் ஆண்டில் பார்வையிடப்படும் சிறந்த 23 சுற்றுலாத் தலங்களில் இலங்கையும் சுற்றுலாத்துறை நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ளது. விருது பெற்ற பயணக்கட்டுரையான ஜூலியானா ப்ரோஸ்ட் இலங்கைக்கு வருவதற்கான காரணங்களை வழங்கியிருந்தார். கொழும்பின் தலைநகரம், அழகிய கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், சமவெளிகள், மலை அனுபவங்கள் மற்றும் இங்குள்ள வனவிலங்குகள் மற்றும் கலாச்சாரம் உட்பட நாட்டின் அழகு பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் கோட்டா அதிகரிப்பு, ஜனாதிபதியின் பணிப்பு

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்ட கோட்டா விநியோகிக்கப்படவுள்ளது. வாகனத்தின் வகை தற்போதைய கோட்டா பரிந்துரைக்கப்பட்ட புதிய கோட்டா THREE WHEEL (Special) 10 15 THREE WHEEL […]

100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை

2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்திற்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,495 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையின் முதல் மூன்று நாடுகளாக ரஷ்யா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தோன்றியுள்ளதாக சுற்றுலா அமைச்சர் தெரிவித்தார்.

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை பட்டதாரிகள்

2023 நிதி ஒதுக்கீடு வரம்பிற்குள் பல மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், மேல், தெற்கு மற்றும் வடமாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

தானத்தின் உச்ச தானம் உயிர் தானம்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையினை சேர்ந்த 7 வயது சிறுவன் மதுமிதனின் “TOF” என்னும் கொடுமையான இருதய நோயினால், சிறுவனும் குடும்பத்தாரும் பட்ட இன்னல்கள் சொல்லி அடங்காது. இவரின் நிலைமை கடுமையாவதினை அவதானித்து எனக்கு உடன் சத்திர சிகிச்சைக்கு பரிந்துரை செய்த வைத்திய கலாநிதி கார்த்திக் அவர்களுக்கும் – சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் காஞ்சன சிங்கப்புலி மற்றும் அவரது மருத்துவ குழுவிற்கும் நன்றி