தலைமன்னார் – தனுஷ்கோடி கப்பல் சேவை?

இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘ராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும்,  ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில்,  இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய தூதரகத்தின் துணை தூதுவரும், அந்நாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர். அத்துடன், இலங்கை கடற்படை […]

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை அறிக்கை

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை முற்றாக நிராகரிக்கின்றோம். கீழ்வரும் படிமுறைக்கமையவே நீர் கட்டணம் அறிவிடப்படுகின்றது என்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை  அறிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சபையால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, நுகர்வோர் மாதாந்தம் நுகரும் நீரின் அளவின் அடிப்படையில் நீர் கட்டணம் அறவிடப்படுவதுடன், குறித்த கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5. வீத கழிவு வழங்கப்படுகின்றது. […]

நள்ளிரவு முதல் GAS விலை…

 இன்று(04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 402 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 183 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. லாப்ஸ் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் டபுள்யூ.கே.எச் வேகபிட்டிய தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவின் விலையை மாற்றியமைத்ததன் பின்னர், தனது நிறுவனத்தின் எரிவாயு விலைகளும் திருத்தப்படும் என லாப்ஸ் நிறுவனம் […]

மழை வேண்டி பிரார்தனை

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்தேக்க பகுதிகளில் மழை வேண்டி சர்வமத தலைவர்கள் மவுஸ்ஸாசாகலை நீர்த்தேக்கத்தில் மத வழிபாடுகளை நடத்துகின்றனர். பிரதானமாக தேசிய மின் உற்பத்திக்கான நீரை வழங்கும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்த்தேக்கங்களில் கடும் மழை பொழிய வேண்டி மஸ்கெலியா பிரதேச சர்வமதத் தலைவர்கள் பல விசேட சமய நிகழ்வுகளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நடத்தினர். மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் அமைக்கும் போது மறைந்து போன பழைய மஸ்கெலியா நகரின் ஆலயம், விகாரை, தேவாலயம் என்பன தற்போது […]

விவசாய அமைச்சர் வெளியிடும் செய்தி

பெரும்போக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஏற்கனவே 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த மேலதிக 3 பில்லியனுடன், பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 13 பில்லியன் ரூபாவாகும்.

ஜாலியோ ஜிம்கானா….

 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்றுடன்(04) நிறைவு பெறுகின்றன. அதற்கமைய, இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு விடுமுறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு- அபாய மணி

மழையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 19000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (02)நடைபெற்ற சர்வதேச […]

சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி

சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காந்தி சௌந்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் இன்று (03) வழங்கப்பட்டுள்ளது. காந்தி சௌந்தராஜன் இதற்கு முன்னர் பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அதிகார சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், […]

ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவராக பாரத் அருள்சாமி நியமிப்பு

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக அரசியல் – தொழிற்சங்க – சமூக – மற்றும் சர்வதேச செயற்பாட்டாளரான பாரத் அருள்சாமி  நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் இன்று (03) வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட துறையின் மனித வள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மற்றும்  துறை சார் அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் மிக முக்கிய நிறுவனமே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமாகும். நீர் வழங்கல் மற்றும் தோட்ட […]